விளையாட்டு

கத்தரி வெயிலுக்கு தண்ணீர் குடிக்காவிட்டால் வரும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்!

ஆர்.ஜெயலட்சுமி

டலில் நீர் வற்றினால் கண்களில் வறட்சி , எரிச்சல், சூடான உணர்வு தோன்றும். அதுமட்டுமன்றி கண்களுக்குக் கீழ் குழி விழ ஆரம்பிக்கும்.

உடலின் நீர் தேக்கம் அவசியம். அது ஆரோக்கியமான உடலுக்கும் , வயதைக் கடந்த வாழ்க்கைக்கும் மிக முக்கியமானது. இதனால் இரத்த ஓட்ட செயல் தடைபடுதல், உணவு செரிமாணமின்மை என பல உடல் தொந்தரவுகள் வரும். அதேபோல் பல நோய்த் தீர்வுகளுக்கு தண்ணீருக்கு எப்போதும் முதலிடம்தான். அதனால்தான் மருத்துவரானாலும், மருத்துவக் குறிப்பானாலும் தண்ணீர் குடியுங்கள் என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெறும். அப்படி நீங்கள் போதுமான தண்ணீர் அருந்தவில்லை எனில் எந்த மாதிரியான பிரச்னைகள் வரும் தெரியுமா?

கண்கள் : உடலில் நீர் வற்றினால் கண்களில் வறட்சி , எரிச்சல், சூடான உணர்வு தோன்றும். அதுமட்டுமன்றி கண்களுக்குக் கீழ் குழி விழ ஆரம்பிக்கும். அதோடு பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ் குறைபாடு கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் பார்வை மங்கும்.

முடி உதிர்தல் : நீர் பற்றாக் குறையாலும் தலையில் அரிப்பு, பொடுகுத் தொல்லை, எரிச்சல் ஏற்படும். இதோடு முடி உதிர்தல், உடைதல், முடி வலிமையின்மை போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

சரும வறட்சி : கைகளில் கீறல் கோடுகள் விழும் அளவிற்கு சருமம் வறண்ட தோற்றத்தில் இருக்கும். இதனால் சருமச் சுருக்கங்கள் உண்டாகி முதிர்ச்சியான தோற்றம் வரும்.

முகப்பருக்கள் : போதிய நீர் சத்து இல்லாத காரணத்தாலும் முகப்பருக்கள் வெளிப்படும். எனவே போதிய நீர் அருந்தினாலே உடலில் தேங்கிய நச்சுகள் வெளியேறி பருக்கள் குறையும்.

கட்டி : வேனிற்கட்டி, வேர்குரு போன்ற பிரச்சினைகளும் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றன.

தலைவலி : நீங்கள் வெயில் காலத்தில் வெளியே சென்று வந்தாலே தலை வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் அதுவும் நீர்ச்சத்து குறைபாடுதான் காரணம். அடிக்கடி தலைவலியால் அவதிப்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே வெளியே செல்லும்போதும் தண்ணீர் குடிக்க, கையில் எடுத்துப் போகவும் மறக்காதீங்க.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT