விளையாட்டு

கபடி போட்டி; களத்தில் உயிரிழந்த வீரர்!

கல்கி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் விமல்ராஜ். 

கபடி வீரரான விமல்ராஜ், நேற்றிரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிரணி வீரர் ஒருவரை விமல்ராஜ் பிடிக்க முயன்று, மயங்கி கீழே விழுந்தார். 

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். எனினும், விமல்  ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார் .

தொடர்நது விமலின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுரியில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கபடி விளையாட்டுப் போட்டியின்போதே கபடி வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

SCROLL FOR NEXT