விளையாட்டு

சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா: கடலில் விழுந்த 3 பெண்கள்! அதிர்ச்சி வீடியோ!

கல்கி

துருக்கியில் பாராகிளைடிங் செய்த மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கடலில் விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியது.

துருக்கியின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் Oludeniz என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 20-ம் தேதி தொடங்கிய இந்த விழா இன்றுடன் முடிவடைய உள்ல நிலையில் இவ்விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோர் பாராகிளைடிங் செய்தனர்.

இந்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த 3 பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து நடு வானில் ஒருவருடன் ஒருவர் மோதினர். இதில் மூவரின் பாராசூட்களும் ஒன்றுடன் ஒன்று சிக்கியதால், சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து கடலில் விழுந்தனர். இதனை தொடர்ந்து கடலில் விழுந்த மூவரையும் கடற்படையினர் மீட்டனர். இந்த, விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

அரசு வேலையில் சேர விருப்பமா? என்னென்ன துறைகள் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

ICC Champion Trophy: இந்தியாவின் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்தத் திட்டம்!

சர்க்கரை நோயாளிகள் சாக்கரின் பயன்படுத்தலாமா?

இஸ்ரேலுக்கு எதிரான முடிவை எடுத்த கொலம்பியா… என்ன காரணம்?

SCROLL FOR NEXT