விராட் கோலி அதிகமுறை சர்வதேச விளையாட்டுகளில் விளையாடியிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். அந்தவகையில் விராட் கோலி தோனியை மிஞ்சிய ஒரு வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஐசிசி கடந்த 2004ம் ஆண்டிலிருந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து வருகிறது. அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அந்த அணியில் ஒரு சிறந்த வீரரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் சிறந்த வீரர்களையும் அறிவித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஒருநாள் உலககோப்பை தொடரின் இறுதியில் சிறந்த ஐசிசி உலககோப்பை அணியும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி அதிக முறை சிறந்த வீரர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையை சென்ற ஆண்டு வரை சுமந்து வந்தார். அதாவது தோனி இதுவரை கிட்டத்தட்ட 13 முறை சிறந்த வீரர் அணியில் இடம்பெற்றிருக்கிறார். இந்த சாதனையை கடந்த ஆண்டே விராட் கோலி சமன் செய்தார். அந்தவகையில் கடந்த ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த வீரர்கள் அணியில் விராட் கோலி தேந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் இவர் அந்த அணியில் 14வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். விராட் கோலி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறைகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 7 முறைகளும், டி20 கிரிக்கெட்டில் ஒருமுறைகளும் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் உலககோப்பையிலும் சிறந்த வீரர் அணியில் இடம் பெற்றிருக்கிறார் விராட்.
அவர் இதுவரை 14 முறை தேர்வுசெய்யப்பட்டத்தில் சுமார் 9 முறை வெற்றிபெற்று ஐசிசி விருதுகளை வாங்கியுள்ளார். அதிகமுறை ஐசிசி விருது வாங்கிய வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கே சேரும். அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர்களுக்கான அணியில் விராட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி என மூன்று கிரிக்கெட் தொடர்களிலும் இடம் பெற்று சாதைனைமேல் சாதனைப் படைத்து வருகிறார்.