indian women's cricket team 
விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்: டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

ஜெ.ராகவன்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது. இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையே மூன்று டி20 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதல் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் அணிக்கு ஹர்மன்ப்ரீத் கெளர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்ஸுவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. அதில் இடம்பெற்ற சிலர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அணியில் சீனியர், ஜூனியர் என இருதரப்பினரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சைகா இஷாக் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஒருபுறம் ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாஃலி வர்மா, பூஜா வஸ்த்ராகர் போன்ற மூத்த வீரர்களும் மறுபுறம் மன்னாத் காஷ்யப், கனிகா அஹுஜா, ஸ்ரேயங்கா படேல், வேகப்பந்து வீச்சாளர் டைடஸ் சாது ஆகிய இளம்வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று டி20 ஒருநாள் சர்வதேச போட்டிகள் தவிர இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது. எனினும் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பங்கு பெறும் அணி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாடீயா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கெளர், ஸ்ரேயங்கா படேல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாகுர், டைடஸ் சாது, பூஜா வஸ்த்ராகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாடீயா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்னேஹ் ரானா, சுபா சத்தீஸ், ஹர்லின் தியோல், சைகா இஷாக், ரேணுகா சிங் தாகுர், டைடஸ் சாது, மேகனா சிங், ராஜேஸ்வரி கெய்க்வேட் மற்றும் பூஜா வஸ்த்ராகர்.

தூங்கும்போது முடியை விரித்துப்போடுவது நல்லதா? அல்லது பின்னிப் போடுவது நல்லதா?

கால்சியம் சத்தை அதிகரிக்கும் 7 வகை பானங்கள்!

நவம்பர் 24: உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம்!

ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியம் தெரியுமா?

மகாவிஷ்ணு கையில் சுழலும் சுதர்சன சக்கரத்தின் பெருமைகள்!

SCROLL FOR NEXT