பி.வி. சிந்து 
விளையாட்டு

உலக பாட்மிண்டன் தரவரிசை: பி.வி. சிந்து 15 வது இடத்துக்கு முன்னேற்றம்!

க.இப்ராகிம்

லக பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து 15 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்தியாவுடைய முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையாக பிவி சிந்து உள்ளார். இவர் ஏற்கனவே இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் விளையாடி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு உலக பாட்மிண்டன் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 15 வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து தரவரிசை பட்டியலிலும் பிவி சிந்து முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆடவருக்கான ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து கிடாம்பி ஸ்ரீகாந்த் 20வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியாவைச் சேர்ந்த ஹெச். எஸ்.பிரனேய் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான்!

தனிமையில் வாழும் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள்… என்ன காரணம்?

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

குழு பயணம் அல்லது தனிப் பயணம் எது சிறந்தது!

SCROLL FOR NEXT