விளையாட்டு

வாவ் வாழைத்தண்டு!

ஆரோக்கியம்!

எஸ்.விஜயலட்சுமி

மால்கள், பழமுதிர்நிலையங்கள், மார்க்கெட், மளிகைக்கடை, தெருவோரக்கடைகள் என எல்லா இடங்களிலும் ஐந்தே ரூபாயில் எளிதாகக் கிடைக்கக் கூடிய வாழைத்தண்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

உடல் எடை குறைக்கவும், தொப்பையைக் கரைக்கவும் விரும்புவோர் தினமும் வாழைத்தண்டு சாப்பிட்டு வர, உடலின் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, படிப்படியாக எடைகுறைந்து சிக்கென்ற உடல் அமைப்பைப் பெறலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உற்ற தோழன் வாழைத்தண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து உடலின் உயிரணுக்களில் சேகரிக்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் அளவை குறைக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் பி 6, இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. உடலின் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.  .

வாழைத்தண்டுகளின் சாறு டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலைச் சுத்தம் செய்வதோடு செரிமானத்தையும், குடல் இயக்கத்தையும் மேம்படுத்து கிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது. வயிற்றுப் புண்களையும் குணப்படுத்தும். வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். நீர் கடுப்பு நோய் உள்ளவர் களுக்கு உபாதைகளை நீக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கற்கள் கரைவதற்கு உதவுகிறது.

வாழைத்தண்டை ஜூஸ், பொரியல், கூட்டு என பலவிதத்தில் உண்ணலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை:1

வாழைத் தண்டை துண்டுதுண்டாக நறுக்கி, சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டவும். சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத் தூள், உப்பு போட்டு குடிக்கவும்.                                                            

வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை: 2

வாணலியில் இரண்டு தம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, அதில் நறுக்கிய  வாழைத்தண்டை போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். நீர் பாதியாக வற்றியிருக்கும். அதை வடிகட்டி, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து, தேவையான உப்புப் போட்டுக் குடிக்கவும். வாரத்தில் ஐந்து நாட்கள் குடித்து வந்தால் விரைவில் தொப்பை கரைந்து, உடல் எடை குறையும்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT