மூட்டு வலி 
ஆரோக்கியம்

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் 10 ஆரோக்கிய உணவுகள்!

ம.வசந்தி

ர்த்ரைடிஸ் என்பது ஒரு மூட்டு நோயாகும். எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக உராயும்போது ஏற்படும் வலி தீராத பிரச்னைகளைத் தரலாம். தொடக்கத்திலேயே இதனை கவனிக்கும் பட்சத்தில் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க முடியும். வயதானவர்களுக்கு மிகவும் சங்கடத்தையும், வேதனையையும் தரலாம். நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் இதனை தடுக்கவும், மூட்டுகளை பாதுகாக்கவும் செய்கிறது. மூட்டுவலியைத் தடுக்கும் ஆரோக்கிய உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. வால்நட்ஸ்: வால்நட்சில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலிக்கு முக்கியப் பங்களிப்பான வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. அவை மூட்டு திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாத்து ஆக்ஸிஜனேற்றிகளையும் கூட்டுகிறது. ஊட்டச்சத்து சம்பந்தமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தினமும் வால்நட்ஸை உட்கொள்வது ஆரோக்கியமான உடல்நலனைப் பேணிக் காக்க உதவுகிறது.

2. ஆளி விதைகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளிவிதை, உடலில் வீக்கத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எடை குறைப்புக்கு ஆளி விதைகளை உட்கொள்வதும் பயனுள்ள ஒன்றாகும். மேலும், இது கீல்வாதத்தைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

3. சியா விதைகள்: சியா விதைகளில் உள்ள ஒமேகா 3, நார்ச்சத்து வீக்கத்தைக் குறைத்து மூட்டு ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. சியா விதைகள் இதய ஆரோக்கியத்திற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது.

4. காட் லிவர் எண்ணெய்: காட் லிவர் எண்ணெய்யில் வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை  மூட்டு ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், மூட்டுவலி வளர்ச்சியின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அட்வான்சஸ் இன் தெரபியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், முடக்கு வாதம் உடைய நோயாளிகள் ஒரு கிராம் காட் லிவர் எண்ணெயை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால், அவர்களின் வலி அளவுகள், கால் விறைப்பு மற்றும் வீங்கிய மூட்டுகள் குறைவதை நிரூபித்திருக்கிறது.

5. முழு தானியங்கள்: முழு தானியங்களான பிரவுன் ரைஸ், ஓட்ஸ் மற்றும் குயினோவா ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள அழற்சி குறிப்பான்களைக் குறைத்து ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழி செய்கிறது. முழு தானியங்களான அமராந்த், பார்லி, பிரவுன் அரிசி, பக்வீட், கம்பு மற்றும் தினை போன்றவை மூட்டு வலிக்கு சிறந்தவையாக உள்ளன.

6. தினை: தினைகளில் மெக்னீசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான குருத்தெலும்புக்கும், எலும்புகளை பராமரிப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

7. பருப்பு வகைகள்: பீன்ஸ், பயறு மற்றும் பட்டாணி போன்ற பருப்புகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், பருப்புகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், தசை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை குறைப்புக்கு பருப்பு வகைகளை உட்கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உடல் பருமனை தடுக்கவும், கீல்வாதத்தைத் தடுக்கவும் இது உதவுகிறது.

8. பச்சை காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. பச்சை காய்கறிகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

9. பழங்கள்: பெர்ரி மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவை வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

10. மீன்கள்: சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இந்த வகை மீன்கள் மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT