6 amazing foods that increase blood 
ஆரோக்கியம்

ரத்தத்தை அதிகரிக்கும் 6 அற்புத உணவுகள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

கிரி கணபதி

ரத்த அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமானது. போதுமான அளவு ரத்தம் இருந்தால் மட்டுமே நமது உடலில் ஆக்ஸிஜன் பரவல், ஊட்டச்சத்து வினியோகம் மற்றும் கழிவுகளை அகற்றுவது முறையாக இருக்கும். ஆனால் மரபியல், வாழ்க்கை முறை மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகள் போன்ற ரத்த அளவை பாதிக்கும் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இருப்பினும் சில உணவுகளை நாம் உட்கொள்வது மூலமாக ஆரோக்கியமான ரத்த அளவை முறையாகப் பராமரிக்க முடியும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் அத்தகைய உணவுகளைப் பற்றி பார்க்கலாம். 

  1. கீரைகள்: கீரைகளை பச்சை இலைக் காய்கறி என அழைப்பார்கள். இதில் உடலுக்குத் தேவையான இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து, சிவப்பு ரத்த அணுக்களின் முக்கிய அங்கமாகும். இது உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்கலாம்.

  2. பீட்ரூட்: பீட்ரூட்டில் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. பீட்ரூட்டில் உள்ள பெட்டாசயனின் எனப்படும் இயற்கையான சிவப்பு நிறமி, இரத்த சிவப்பணு உற்பத்தியைத் தூண்டி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பீட்ரூட்டை ஜூஸ் அல்லது பொரியல் செய்து சாப்பிடுவது இரத்த அளவை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். 

  3. மாதுளை: மாதுளை ஒரு சுவையான பழமாகும். இது இரும்புச்சத்து, விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மாதுளையில் உள்ள அதிக வைட்டமின் சி உள்ளடக்கம், இரும்புச் சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

  4. பருப்புகள்: பருப்பு, இந்திய உணவு வகைகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இது தாவர அடிப்படையிலான புரதம், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். சைவ உணவு மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருப்பின், பருப்பு வகைகள் அவர்களுக்கு உதவும். இதை உட்கொள்வது மூலமாக இரத்த ரத்த அளவை குறிப்பிட்ட அளவு அதிகரிக்கலாம். 

  5. நெல்லிக்காய்: ஆம்லா என அழைக்கப்படும் நெல்லிக்காயில், விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதன் மூலமாக உடலுக்கு இரும்புச்சத்தை உறிஞ்சும் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவி, கணிசமான அளவு ரத்த மேம்படுத்தலுக்கு உதவுகிறது. நெல்லிக்காயை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், சட்னி போலவும் உட்கொள்ளலாம். 

  6. முருங்கைக்காய்: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்து நிறைந்த முருங்கைக்காய் இரும்பு சத்து வைட்டமின் ஏ, சி மற்றும் ஆக்சிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, ஆரோக்கியமான முறையில் ரத்த அளவை அதிகரிக்கலாம்.

இந்த உணவுகளை நாம் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது மூலமாக அவற்றின் இயற்கையான நன்மைகளை நாம் பெற முடியும். குறிப்பாக இந்த உணவுகளை நீங்கள் முயற்சிப்பதற்கு முன்பு தகுந்த சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இந்த பதிவு தகவலை தெரியப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் சுகாதாரம் நிலைமைகள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்பு மேற்கூறிய உணவுகளை நீங்கள் முயற்சிக்கலாம்.  

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT