6 Simple Grandma Remedies to Relieve Severe Toothache Pain! Image Credits: Saatwika Ayurveda
ஆரோக்கியம்

சொத்தைப் பல் வலியைப் போக்க எளிய 6 பாட்டி வைத்தியம்!

நான்சி மலர்

ல் சொத்தை என்பது பற்களின் மீதோ அல்லது Enamel மீதோ ஏற்படும் பாதிப்பாகும். இதை குணப்படுத்தவில்லை என்றால் பல் வலி, பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். இந்தப் பதிவில் பல் சொத்தையால் ஏற்படும் வலியைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிமையான பாட்டி வைத்தியத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. உப்பு நீர் கொப்பளித்தல்: பல் சொத்தையால் ஏற்படும் வலிக்கு சிறந்த மருத்துவம் கல் உப்பை தண்ணீரிலே கரைத்து கொப்பளிப்பதுதான். இது ஒரு இயற்கையான Disinfectant ஆகும். இவ்வாறு செய்யும்போது பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவு துகள்களையும் இது வெளிக்கொண்டு வந்துவிடும். உப்பு தண்ணீர் வாயில் ஏற்படும் வீக்கம் மற்றும் வாய் சம்பந்தமான நோய் தொற்றுகளையும், புண்களையும் குணப்படுத்தக் கூடியதாகும்.

2. பூண்டு: பல ஆண்டு காலங்களாக பூண்டிலுள்ள மருத்துவ குணத்தை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பூண்டில் ஆன்ட்டி பாக்டீரியல் குணம் உள்ளதால், பல் சொத்தையை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பது மட்டுமில்லாமல் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

3. கிராம்பு: கிராம்பு எண்ணெய் பல வருடங்களாக பல் வலியை போக்கப் பயன்பட்டு வருகிறது. பல் சொத்தையில் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தும்போது இது வலி ஏற்பட்டிருக்கும் இடத்தை மரத்துப்போக செய்து, வீக்கத்தையும் குறைக்கிறது. கிராம்பில் இயற்கையான ஆன்டி செப்டிக்கான யூஜெனால் உள்ளது என்பது குறிப்பிடத்கக்கது.

4. கொய்யா இலை: கொய்யா இலையில் Anti inflammatory properties உள்ளதால் புண்கள் ஆறுவதற்கு இது உதவுகிறது. அது மட்டுமில்லாமல் இதில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை கொண்டிருப்பதால், வாய் சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. கொய்யா இலைகளை வெறுமனே மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதித்க வைத்து Mouthwash போன்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. மஞ்சள்: மஞ்சள் பாரம்பரியமாக உணவிற்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறோம். மஞ்சளில் குர்குமின் என்னும் காம்பவுண்ட் உள்ளது. இது ஆன்டி பேக்டீரியல், ஆன்ட்டி செப்டிக் மற்றும் வலி நிவாரணியாகப் பயன்படுகிறது. மஞ்சளை குழைத்து வலி உள்ள இடத்தில் தடவுவதால் சிறிது நேரத்திலேயே வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.

6. இஞ்சி: மஞ்சளைப் போலவே இஞ்சியிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இஞ்சியில் Raffinose மற்றும் Gingerol என்னும் காம்பவுண்ட் உள்ளது. இது பல் வலியால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது. அது மட்டுமில்லாமல், ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்ய உதவுகிறது. இந்த 6 எளிமையான பாட்டி வைத்தியத்தைப் பயன்படுத்தி பல் வலிக்கு தீர்வு காண்பது சிறப்பு. எனினும், நிரந்தர பிரச்னைக்கான தீர்வாக நல்ல பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைக் கேட்பது நல்லதாகும்.

உலகெங்கிலும் பெண் மருத்துவர்கள் உருவாக காரணமான, முதல் மருத்துவப் பட்டம் பெற்ற, பெண்மணி யார்?

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

மஹா லக்ஷ்மியின் பிறப்பு ரகசியம் தெரியுமா?

இந்தப் பறவைங்க உங்க வீட்டுக்கு வந்தா துரத்தி விட்றாதீங்க!

Meet Gitanjali Rao: The Young Scientist and Inventor Changing the World!

SCROLL FOR NEXT