7 simple steps to follow to get rid of varicose veins!
7 simple steps to follow to get rid of varicose veins!Image Credits: NanoVein Gel and capsules

Varicose veinsஐ போக்க கடைப்பிடிக்க வேண்டிய 7 எளிய வழிமுறைகள்!

Published on

Varicose veins என்றால் நரம்புகள் வீங்குவதால் ஏற்படக்கூடிய பிரச்னையாகும். இது அதிகமாக கால்களில் ஏற்படும். நீண்ட நேரம் நடப்பது, நிற்பது போன்ற அழுத்தத்தை கால்களுக்குக் கொடுப்பதால் இந்தப் பிரச்னை வருகிறது. கால்களில் Varicose veins வருவதால் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். நரம்புகள் சுருண்டுக்கொள்ளும். நீலம் அல்லது பர்புள் நிறத்தில் நரம்புகளின் நிறம் மாறிவிடும். இந்த பிரச்னையை வீட்டிலேயே சரிசெய்வதற்கான சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நரம்பில் இரத்தம் தேங்குவது குறையும். நீச்சல், நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா போன்ற பயிற்சிகள் செய்வதால் Varicose veins வராமல் தடுக்கலாம்.

2. கம்பிரஷன் ஸ்டாக்கிங்: கம்பிரஷன் ஸ்டாக்கிங் மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இதை காலில் அணிந்து கொள்வதன் மூலம் கால்களுக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது. இதனால், எலும்பு மற்றும் நரம்புகள் இரத்தத்தை இதயத்திற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதை அணிவதன் மூலம் Varicose veinsனால் ஏற்படும் வலியும் குறையும்.

3. உடையில் கவனம்: Varicose veins இருப்பவர்கள் இறுக்கமான உடையை அணிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், டைட்டான உடையை அணிவதால் அது உடலில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. தளர்வான உடைகளை அணியும்போது இரத்தம் ஓட்டத்திற்கு தடை ஏற்படாமல் இருக்கும். ஹீல் அணிவதற்கு பதில் ஷூ அணிவது Varicose veins வராமல் இருக்க உதவுகிறது.

4. மசாஜ்: Varicose veins உள்ள இடத்தில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எண்ணெய் அல்லது மாய்ஸ்டரைசர் பயன்படுத்தி மிருதுவாக மசாஜ் செய்வது சிறந்தது.

5. நடமாடுவது அவசியம்: ஒரே இடத்தில் அதிகமாக அமர்ந்து வேலை செய்வது Varicose veins வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் அமர்ந்திருக்காமலே எழுந்து நடமாடுவது அவசியமாகும். அப்போதுதான் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கால் மேல் கால் போட்டு அமர்வது கால்களுக்கும், பாதங்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு கொய்யா Vs வெள்ளை கொய்யா: எது சிறந்தது?
7 simple steps to follow to get rid of varicose veins!

6. உடல் எடை குறைத்தல்: உடல் எடை அதிகமாக உள்ளவர்களை Varicose veins அதிகமாகத் தாக்குகிறது. எனவே, உடல் எடையை குறைப்பது நரம்பில் அழுத்தத்தை குறைத்து நரம்பில் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்கும்.

7. உணவுமுறை: உணவில் அதிகமாக Flavonoidsஐ சேர்த்து கொள்வது நல்லதாகும். Flavonoids இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்தத்தில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் Varicose veins வராமல் பாதுகாக்கிறது. காய்கறிகள், பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு புரக்கோலி, திராட்சை, செர்ரி, ஆப்பிள், ப்ளூபெர்ரி ஆகியவற்றில் Flavonoids இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 7 வழிமுறைகளை கடைப்பிடித்து Varicose Veins வருவதற்கு முன்பே தடுத்துவிடுவது சிறந்ததாகும்.

logo
Kalki Online
kalkionline.com