Amazing Juices to Relieve Constipation! 
ஆரோக்கியம்

மலச்சிக்கலைப் போக்க உதவும் 6 அற்புத சாறுகள்! 

கிரி கணபதி

மலச்சிக்கல் என்பது மிகவும் பொதுவான ஒரு செரிமான பிரச்சனை. வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழித்தல் அல்லது கடினமான மலம் கழித்தல் போன்றவை மலச்சிக்கலின் அறிகுறிகளாகும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாதது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை அடங்கும்.‌ 

இன்றைய காலத்தில் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் சாறுகள் அருந்துவது ஆகியவை அடங்கும். இந்தப் பதிவில் மலச்சிக்கலை போக்க உதவும் சில சாறுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பீட்ரூட் சாறு: பீட்ரூட் சாறு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. இவை அனைத்தும் மலச்சிக்கலை போக்க உதவும். பீட்ரூட் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவும் நைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் சாறு குடிப்பது நல்லது. 

கீரை சாறு: நீங்கள் எந்த கீரையை வேண்டுமானாலும் சாறு பிழிந்து குடிக்கலாம். இதில் நார்ச்சத்து விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் அவை அனைத்தும் மலச்சிக்கலை போக்க உதவும். கீரை சாற்றில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் குளோரோஃபில் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். 

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு சாறு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். ஆரஞ்சு சாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோயை தடுக்க உதவும். 

அன்னாசி சாறு: அன்னாசி சாரு செரிமானத்திற்கு உதவும் நொதியைக் கொண்டுள்ளது. இது புரதங்களை செரிக்க உதவுவதால், மலச்சிக்கலை தடுத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் அண்ணாச்சி சாரு வீக்கத்தை குறைக்கவும், மூட்டு வலியை குறைக்கவும் உதவுவதால், இதை தவறாமல் உட்கொண்டு வருவது ஆரோக்கியத்திற்கு நல்லது. 

பசலைக்கீரை சாறு: பசலைக்கீரை சாற்றில் நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை உடனடியாக சரி செய்யும். மேலும் பசலைக்கீரை சாறு ரத்த சோகையை தடுத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

ஆப்பிள் சாறு: ஆப்பிள் சாற்றில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் பெக்டின் உள்ளது. மேலும், இதில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவையும் இருப்பதால், தினசரி ஆப்பிள் சாறு குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

இந்த சாறுகளை தொடர்ச்சியாக குடித்து வந்தால், அவை உங்கள் உடலில் நார் சத்துக்களை சேர்த்து மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவும். மேலும், இத்தகைய சாறுகள் உங்கள் உடலுக்கு நீரேற்றத்தை வழங்கி, செரிமானத்தை இயற்கையான முறையில் மேம்படுத்த உதவுகின்றன. 

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT