Are you a nail biter? Ugh...change 
ஆரோக்கியம்

நீங்கள் நகம் கடிப்பவரா? அச்சச்சோ… மாற்றிக்கொள்ளுங்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

கம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எதிரில் நின்று பேசுபவர்கள் கொஞ்சம் அருவெறுப்பாகத்தன் அவர்களைப் பார்ப்பார்கள். ஏனென்றால் நகம் கடித்துவிட்டு அந்த எச்சில் கையோடு பொருட்களை எடுப்பார்கள். இப்படி பல பிரச்னைகள் உண்டு நகம் கடிப்பதில். அது மட்டுமா? நகம் கடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் நம் உடலுக்கு வரும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நகம் கடிக்கம் பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கம் உடலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதனால்தான் முன்னோர் நகம் கடித்தால் வீட்டிற்கு நல்லது இல்லையென்று கூறுவார்கள். இது நோய் கிருமிகளை உடலினுள் கொண்டு செல்ல இலகுவான வழியாகும்.

நகம் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

நகங்களை தொடர்ந்து கடிப்பதால் நகத்தினுள் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலினுள் செல்வதுடன், தொற்று பாதிப்பும் ஏற்படுகின்றது. விரல்களில் வீக்கம் ஏற்பட்டு, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறும். பார்ப்பதற்கு சீழ்படிவது போல் காணப்படும்.

நகம் கடிப்பதால் பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் சொத்தை மற்றும் பல் கூச்சம் போன்ற வாய்வழி பிரச்னைகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தி வேறு பொருட்களை கூட கடிக்க முடியாத நிலை ஏற்படக் கூடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு உட்படுவார்கள். பெற்றோர், நண்பர்களிடம் மதிப்புக் குறையும். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட ஆண்களும் நெயில் பாலிஷ் உபயோகிப்பார்கள். இதனால் சமூகத்தில் கௌரவ பிரச்னைகள் எழக்கூடும்.

மருந்துக் கடையில் கிடைக்கக்கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசிக் கொள்ளுதல், விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல், குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருளைத் தருவதாக குழந்தைகளுக்கு வாக்குறுதி கொடுத்தல், நகம் கடிக்கும் குழந்தைகளைக் கண்டித்தல் மற்றும் நெயில் பாலீஸ் பயன்படுத்துதல் போன்றவற்றை கையாளலாம். தந்திரமான சில வேலைகளைச் செய்து மனதை கட்டுப்படுத்தி நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிடுவோம்; ஆரோக்கியமாய் வாழ்வோம்.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT