Jackfruit seeds 
ஆரோக்கியம்

பலாக்கொட்டை உடலுக்குத் தரும் நன்மைகளும் தீமைகளும்!

கலைமதி சிவகுரு

முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். பொதுவாக, வெயில் காலங்களில் இந்தப் பழங்கள் அதிகமாகக் கிடைக்கிறது. பழத்தை வெட்டுவதற்கு மிகவும் பொறுமை வேண்டும். அதை இரண்டாக வெட்டிய பின்னர் அதன் உள்ளே இருக்கும் சுளைகளை எடுப்பதற்கு கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டால் பிசின் போன்ற திரவம் கைகளில் பரவாமல் பார்த்துக் கொள்ளலாம். பலா பழத்தை சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை வீணாக்காமல் பயன்படுத்தலாம்.

பலாக்கொட்டை தரும் நன்மைகள்:

1. பலாப்பழம் இனிப்பு சுவை அதிகம் கொண்டதால் அதிகம் சாப்பிட்டு வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவார்கள். ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.

2. பலாக்கொட்டைகளை சுட்டும், அவித்தும் காரத்தோடு சாப்பிடுவதால் வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்.

3. புரத உள்ளடக்கம் நிறைந்த பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்க உதவுகின்றன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலின் புரதச் சத்து அதிகரிக்கிறது.

4. பலாக்கொட்டைகளைக் கொண்டு ருசியான உணவுகளைச் செய்யலாம். இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் உள்ள திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

5. பலாக்கொட்டைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி பலாக்கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் என அறியப்படுகிறது.

6. பலாக்கொட்டைகளில் வைட்டமின் ‘ஏ' நிறைந்துள்ளது. இது பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் கண்புரை, மாகுலர் (விழித் திரையின் ஒரு பகுதி) சிதைவு என்னும் கண் பிரச்னைகளைத் தீர்க்கிறது.

7. பலாக்கொட்டைகளை அடிக்கடி உணவில் சிறிதளவு சேர்த்துவந்தால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும்.

8. பலாக்கொட்டைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராகப் போராடுகிறது. பொலிவான சருமத்தைப் பெற பலாக்கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து சருமத்தில் தொடர்ந்து தடவி வரும்போது நல்ல பலன் கிடைக்கும்.

9. பலாக்கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ முடிக்கு வலுவூட்டி முடி உடைவதை தடுக்கிறது. இதில் உள்ள தாவர அடிப்படையிலான புரதச்சத்து முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு பங்களிக்கும்.

10. இதில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தையும் குறைக்கவும் உதவுகிறது.

11. பலாக்கொட்டையில் நார்ச்சத்து, கரோட்டினாய்டுகள், பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே, இதை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய நோய்கள் வராமல் இருக்கவும் உதவும்.

12. கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரிபோஃப்ளேவின், தயமின், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் பலாக்கொட்டைகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும்.

பலாக்கொட்டைகளின் தீமைகள்:

1. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

2. பலாக்கொட்டைகளில் ட்ரிப்சின் எதிர்ப்பான் உள்ளது. எனவே, அதிக அளவு பலாக்கொட்டைகளை உண்பது அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.

3. பலாக்கொட்டைகளை அதிக அளவு உண்பதால் இரத்தம் உறைவதை மெதுவாக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகின் மிக சிறிய 'புடு' மான் ஈன்ற குட்டிமான்!

‘ஆல் இன் ஒன்’ பெற்றோராகத் திகழ்வது எப்படி தெரியுமா?

திருப்பதி லட்டு வாங்க இனி திருப்பதிக்கு செல்ல வேண்டாம்! 

Soap Vs Body Wash: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

Param Rudra: இது 1000 கம்ப்யூட்டருக்கு சமம்! 

SCROLL FOR NEXT