To eradicate mosquitoes... 
ஆரோக்கியம்

கொசுக்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? அப்படி அழித்தால் என்ன ஆகும்?

A.N.ராகுல்

கொசுக்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? அப்படி அழித்தால் என்ன ஆகும்?

பகல் இரவு என்று பாராமல் எந்நேரமும் நம் காதோரம் ‘உய்யி’ என்ற ரீங்காரத்துடன் நம்மை தொந்தரவு செய்துகொண்டும், அது  போதாதென்று  கழுத்து, கை ,கால் என்று உடம்பில் எல்லா இடத்திலும் கடித்து நோய்களை பரப்பும் கொசுக்களை ஒரே அடியாக அழிக்க வேண்டும் என்று எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கிறது அல்லவா? அப்படி அழித்தால், என்ன நன்மை நமக்கு உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கொசுக்களின் கொடிய தாக்கம்

மனித வரலாற்றில் அதிகமான இறப்புகளுக்கு, போர்கள் மற்றும் மோதல்கள் ஆகியவற்றைக் காட்டிலும் கொசுக்கள் தான் காரணமாக இருந்துள்ளன. கடந்த 50,000 ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்களில் ஏறக்குறைய பாதி பேர் இந்த சிறிய பூச்சிகளால் இறந்துள்ளனர். மலேரியா, ஜிகா, மேற்கு நைல் (West Nile) மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் திறன் இந்த கொசுக்களுக்கு இருப்பதால் தான் இன்றளவும் மனிதர்களுக்கு ஆபத்தானதாய் விளங்குகின்றன. இந்நோய்களுக்கு என்ன தான் பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், வருடா வருடம் இதனால் வரும் உயிரிழப்புகள் உலகம்  முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.   

அனைத்துக் கொசுக்களும் கொடியவை அல்ல

ஒரு கொசு விரட்டி தெளிப்பை (Mosquito repellent spray)  பயன்படுத்தும்  முன், நாம் பார்க்கும் எல்லா கொசுக்களும் ஆபத்தானவை அல்ல என்பதை அறிந்து கொள்வது அவசியம். தோராயமாக 3,500 கொசு வகைகளில், சுமார் 100 கொசு இனங்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து நோய்களைப் பரப்பும் திறன் கொண்டவை.

சில கொசுக்கள் மனித இரத்தத்தை விட தேன் மற்றும்  தாவர சாறு ஆகியவற்றை விரும்புகின்றன. உதாரணமாக:

குலிசெட்டா கொசுக்கள்(Culiseta mosquitoes) மனிதர்களைக் கடிக்கின்றன, ஆனால் பலவீனப்படுத்தும் நோய்களை நம் உடம்பில் பரப்புவதில்லை.

டாக்ஸார்ஹைன் சைட்டுகள் உலகளவில் காணப்படும் இந்த வகை கொசுக்கள், உயிரினத்தின் இரத்தத்தை விட தேன் சர்க்கரையை தான் அதிகம் விரும்புகின்றன.

அனைத்து கொசுக்களையும் ஒழிப்பதற்குப் பதிலாக, மிகவும் பிரச்சனைக்குரிய இனங்கள் மீது கவனம் செலுத்தலாம். உதாரணத்திற்கு,

மஞ்சள் காய்ச்சலுக்கும், ஜிகா போன்ற நோய்களை பரப்புவதற்கு காரணமான ஏடிஸ் எஜிப்டி(Aedes aegypti), இப்போது உலகளவில் பரவலாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த வகை இன கொசுக்கள் உலகம் முழுக்க பரவ தொடங்கி இப்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் உள்ள கிராமப்புறங்களில்  அனோபிலிஸ் காம்பியா(Anopheles gambiae), என்ற இனத்தை சேர்ந்த கொசுக்கள் மலேரியா பரவுவதற்கு பெரும் காரணமாக இருக்கின்றன,  இதன் காரணமாக இது "பூமியில் இருக்கும் மிகவும் ஆபத்தான கொசு இனங்களில்  ஒன்று" என்று சொல்லப்படுகிறது.

முழுவதுமாக அழிக்க முடியுமா? அப்படி அழித்தால்…?

நம் ஆசைப்படி உலகில் காணப்படும் 3,000+ அதிகமான கொசு வகைகளை முற்றிலும் அழித்தால், கொசு இனம் என்பதே இல்லாமல் போகும் அதே நேரம், அதுவே, உலகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளும், அதற்கு பக்கபலமாய் உள்ள உணவுச் சங்கிலிகளையும் சீர்குலைவதற்கு காரணமாகிவிடும். எனவே இதற்கு மாறாக செய்ய வேண்டியது என்னவென்றால், மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொசுக்களை கட்டுப் படுத்துவதில் கவனம் செலுத்துவதே ஆகும். மேலும், கொசுக்களை ஒழிப்பது குறுகிய காலத்திற்கு  வேண்டுமென்றால் நம்மை மகிழ்விக்கலாம். ஆனால் அது எதிர்பாராத மறைமுக விளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT