Silver Utensils 
ஆரோக்கியம்

வெள்ளிப்பாத்திரங்களில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பாரதி

பொதுவாக நாம் ஸ்டீல் தட்டுகளிலும் ஸ்பூன்களிலும்தான் சாப்பிடுவோம். ஆனால், வெள்ளிப்பாத்திரங்களில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

அந்தக்காலத்தில் அதிகமாக இலைகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இலைகளுக்கு அடுத்து மக்கள் வெள்ளித்தட்டுகளையும், பித்தாளை பாத்திரங்களையும் பயன்படுத்தி வந்தார்கள். வெள்ளிப்பாத்திரங்களில் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்பதே நமது முன்னோர்களின் நம்பிக்கை. இதனையடுத்து ஸ்டைன்லெஸ் ஸ்டீல் தட்டுகள் வந்தவுடன், வெள்ளித்தட்டில் பணக்காரர்கள் மட்டும்தான் சாப்பிடுவார்கள் என்பதுபோன்ற நம்பிக்கை பரவியது. ஆனால், வெள்ளித்தட்டில் சாப்பிடுவது அறிவியல் ரீதியாக நமது உடலுக்கு அவ்வளவு நன்மைகளைத் தருகிறது.

1.  வெள்ளிப்பாத்திரங்களில் சாப்பிட்டு வருபவர்களுக்கு மனநிலை மேம்படும். மேலும் கார்டிசோன் அளவின் உற்பத்தி அதிகமாகி, மன அழுத்தம் குறையும். இதன்மூலம் வெள்ளிப்பாத்திரங்களில் சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ளும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2.  மேலும் நோயெதிர்ப்பு மண்டலமும் வலுவடையும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட தொடங்கியதிலிருந்து வெள்ளிப் பாத்திரத்தில் கொடுத்து வந்தால், சிறு வயதிலிருந்தே நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.

3.  உஷ்னத்தைத் தனிக்கும் சக்தி வெள்ளிப்பாத்திரங்களுக்கு உண்டு. ஆகையால், சூட்டு உடம்புக்காரர்கள் வெள்ளிப்பாத்திரத்தில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதனால், உடல் குளிர்ச்சியாக வைத்து, PH லெவலை சீராக வைத்துக்கொள்ளும்.

4.  சிறுவயதிலிருந்து எவரொருவர் வெள்ளிப்பாத்திரத்தில் சமைத்து, வெள்ளிப்பாத்திரத்திலேயே சாப்பிடுகிறாரோ, அவர் நீண்டக்காலம் ஆரோக்கியமாக வாழ்வார்.

5.  வெள்ளிப்பாத்திரத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் ஜீரணத்தைத் தூண்டும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படும். இது குடல் அரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும். அதேபோல் ஊட்டச்சத்தையும் சரியாக உறிஞ்சிக்கொள்ளும்.

6.  இவையனைத்தையும்விட வெள்ளிப்பாத்திரத்தில் சாப்பிட்டால் உணவு மிகவும் ருசியாக இருக்குமாம்.

7.  வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது என்று ஒருசில ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் அவை உணவுகளை நீண்ட நேரம் கெடாமல் பதமாக வைத்திருக்கும்.

8.  வெள்ளிப்பாத்திரம் உடல் செல்களை புத்துணர்வாக வைத்துக்கொள்ளவும், நன்றாக இயக்கவும் உதவி செய்கிறது.

9.  உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.

நமது முன்னோர்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க அந்தக் காலத்தில் வெள்ளி நாணயத்தை உள்ளே போட்டு வைப்பார்களாம். அதேபோல், ஒயின் போன்றவை கெடாமல் இருக்கவும் வெள்ளியைதான் பயன்படுத்துவார்களாம். அந்த அளவிற்கு வெள்ளி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இனி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வெள்ளிப்பாத்திரங்களை ஆலோசித்து பயன்படுத்துவோம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT