சிறகடிக்க ஆசை சீரியல் நடிகருக்கு திருமணம்… வெளியான அப்டேட்!

Siragadikka aasai team
Siragadikka aasai team
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோ முத்துவிற்கு மிக விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பலருக்கும் பிடித்தமான ஒரு சீரியலாகும். இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வரும் ஒரு தொடராக இருந்து வருகிறது. மீனா முத்து ஜோடி மிகவும் ஃபேமஸான ஜோடியாகும். இந்த ஜோடிக்கே தனி ரசிகர்கள் உண்டு. முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்திற்கு இதுதான் முதல் சீரியல் என்றாலும், தனது முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இவர் டிக் டாக், instagram ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது.

அதற்குப் பின் இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றி வசந்தின் திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இவர் சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தரை திருமணம் செய்யவுள்ளதாக சில நாட்கள் முன் அறிவித்தார். வைஷ்ணவி ராஜா ராணி 2 சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். முதல் சீரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத்தொடர்ந்து இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டனர். பின்னர் எளிதாக இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்தது.

இதையும் படியுங்கள்:
வெளியானது சுந்தரி தொடரின் கடைசி நாள் புகைப்படம்!
Siragadikka aasai team

இப்படி இருக்கும் நிலையில் வெற்றி வசந்த்- வைஷ்ணவி திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு அதாவது இந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. சென்னையில் காலை 9 மணி அளவில் இவர்களுடைய திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், திருமணம் நடக்க இருக்கும் இடம் குறித்த தகவல் தான் தெரியவில்லை.

logo
Kalki Online
kalkionline.com