Do you know the benefits of red guava? https://news.lankasri.com
ஆரோக்கியம்

சிவப்பு கொய்யாபழத்தில் உள்ள நன்மைகள் தெரியுமா?

கல்கி டெஸ்க்

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சிவப்பு கொய்யாவில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி3, பி6, பி9, பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்து உள்ளது.

இளஞ்சிவப்பு கொய்யா நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சிறந்தது. சிவப்பு கொய்யாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும்.

ஒரு சிவப்பு கொய்யாவில் உள்ள ஊட்டசத்துகளின் அளவு கால்சியம் 14.22 மில்லி கிராம், இரும்புச்சத்து 0.40 மில்லி கிராம், மக்னீசியம் 13.26 மில்லி கிராம், பொட்டாசியம் 270 மில்லி கிராம், புரதம் 1.19 மில்லி கிராம், நீர்ச்சத்து 81.22 கிராம், நார்ச்சத்து 7.39 கிராம், கார்போஹைட்ரேட் 9.14 கிராம், வைட்டமின் சி 228 மில்லி கிராம் ஆகியன உள்ளன.

இதய ஆரோக்கியம்: இளஞ்சிவப்பு கொய்யாவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஃபைபர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இது மாரடைப்பு அபாயம் போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

புற்றுநோய் அபாயம்: இளஞ்சிவப்பு கொய்யாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் நம்மை காப்பாற்றுகிறது.

சரும ஆரோக்கியம்: சிவப்பு கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சருமத்தை அழகாக மாற்றுகிறது.

மேலும், இதிலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஆக்ஸினேற்றிகள், சரும செல் சேதம் மற்றும் வயதான செயல்முறைக்கு எதிராக போராட உதவுவதால், சருமம் 40 வயதிலும் கூட 20 வயதைப் போல் இருக்கும்.

நிதிஷ்குமார் யாழ்

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT