Do you know the cause of numbness in hands and feet?
Do you know the cause of numbness in hands and feet? https://www.polimernews.com
ஆரோக்கியம்

கை, கால்கள் மரத்துப்போவதன் காரணம் தெரியுமா?

மகாலட்சுமி சுப்பிரமணியன்

ம்மில் பலர், ‘அடிக்கடி கை, கால் மரத்துப்போகுது, படுத்த பின் எழும்போது கால்கள் மரத்துப்போகிறது’ என்போம். உடலில் உள்ள உறுப்புகள் மரத்துப்போவது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான Numbness symptoms எனும் மூளை, முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கு பல நாட்களாக இந்த மரத்துப்போதல் பிரச்னைகள் இருந்தால் அது மரபு அணுக்கள் கோளாறாக இருக்கலாம். அதில் குறைபாடுகள் உண்டானால் உடல் பகுதிகள் மரத்துப்போனது போன்று தோன்றும். ஏதேனும் ஆன்டி பயாடிக் மாத்திரை மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்ளும் போது இப்பிரச்னை வருவதாகக் கொள்ளலாம். வேறு உபாதைகளுக்கு தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது இந்த மரத்துப்போதல் வரும்.

தைராய்டு ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் இந்த மரத்துப்போதல் பிரச்னைகளை கொடுக்கும். உடல் எடை அதிகரித்து கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்தப் பிரச்னை வரக்கூடும். நாள்பட்டு படுக்கையில் உள்ளவர்கள், உடல் இயக்கம் குறைந்தவர்களுக்கு. மரத்துபோதல் சகஜமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான வைட்டமின் B12 சத்து குறைவாக இருந்தால் இப்பிரச்னை வரும். வைட்டமின் பி12 உள்ள உணவை உண்ண இப்பிரச்னை சரியாகும். தொழுநோயாளிகள் இந்த மரத்துப்போன உணர்வால் தொடு உணர்ச்சி இன்றி இருப்பர். தகுந்த மாத்திரைகள் மூலம் இதை சரிசெய்ய முடியும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு நார்மலாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் பாதத்தில் உணர்ச்சியற்று போவது, வலி இல்லாதது போன்றவை தோன்றும். கவனமாக மருத்துவ அறிவுரைப்படி சர்க்கரை அளவை கன்ட்ரோலாக வைத்திருக்க வேண்டும்.

காயங்கள் ஏற்பட்டால் விரைவில் ஆறாமல் நரம்புகளை பாதிக்கும். அதனால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மரத்துப் போதல் பெரிய பிரச்னை. கல்லீரல் பாதிக்கப்பட்டு உணர்வின்றிபோகும் அளவுக்கு அதிகமாக மது அருந்தாமல் கன்ட்ரோலாக இருக்க வேண்டும்.

கணினி முன் நீண்ட நேரம் அமர்பவர்களுக்கும், மாதவிலக்கின்போது உதிரப்போக்கு அதிகமாக இருந்து அதனால் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் மரத்துபோதல் பிரச்னைகள் வரும். இதை அலட்சியப்படுத்தாமல் நல்ல சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்கம் என மேற்கொண்டால் மரத்துபோதல் பிரச்னைகள் வராது.

பக்கவாதத்தால் மரத்துபோவது என்பது தனி பிரச்னை. அதிக இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, மூளையில் பிரச்னைகள், அடிபடுதல் குறிப்பாக தலையில் அடிபட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இப்படி பலவித காரணங்கள் மரத்துபோவதற்கு இருந்தாலும் அடிப்படையில் நல்ல உணவு, ஆரோக்கிய உடற்பயிற்சி இருந்தால் சத்துக் குறைபாட்டால் வரும் மரத்துப்போதல் ஏற்படாது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது எல்லா வகையிலும் சிறந்தது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT