பெர்கமாட் எண்ணெய் https://www.healthline.com
ஆரோக்கியம்

பெர்கமாட் எண்ணெயிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

பெர்கமாட் (Bergamot) என்பது லெமன், ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றதொரு சிட்ரஸ் வகைப் பழத்தைச் சேர்ந்தது. இது ஐரோப்பாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. லெமன் மற்றும் ஆரஞ்சு இரண்டும் கலந்த கலவை போல் இருக்கும் இப்பழத்திற்கு தனித்துவமான மணம் உண்டு. இப்பழத்தின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பலவித நோய்களைக் குணப்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் கொண்டது. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மனநிலை: பெர்கமாட் எண்ணெய் உற்சாகமான மனநிலை உண்டுபண்ண உதவும். அது ஸ்ட்ரெஸ் மற்றும் மன வருத்தங்களைக் குறையச் செய்யும். மேலும், மூளையின் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து மன அழுத்த நோய் உண்டாகும் அறிகுறிகளையும் நீக்கும்.

2. சரும ஆரோக்கியம்: பெர்கமாட் எண்ணெயில் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் நிறைய உள்ளன. இவை சருமத்திலுள்ள பாக்டீரியாக்களை அழித்து சரும ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.

3. ஜீரணம்: இந்த எண்ணெய் செரிமானத்துக்கு உதவக்கூடிய பித்த நீரின் சுரப்பை அதிகரிக்கச் செய்து ஜீரண மண்டல உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவி புரியும்.

4. நோயெதிர்ப்பு சக்தி: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். மேலும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்யும்.

5. ஆன்டி மைக்ரோபியல்: இந்த எண்ணெய் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

6. வலி நிவாரணி: பெர்கமாட் எண்ணெயில் உள்ள அனால்ஜெஸிக் குணமானது அவ்வப்போது தோன்றும் வலிகளை நீக்கவும் நாள்ப்பட்ட வலிகளின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவும். இந்த எண்ணெயை கேரியர் எண்ணெய் என்று கூறப்படும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றுடன் கலந்து அதன் கான்சென்ட்ரேஷனை குறைத்து உபயோகிக்க அறிவுறுத்தப்படுகிறது. அல்லது அரோமா தெரபி மூலமாகவும் உபயோகிக்கலாம்.

7. ஹார்ட் ஹெல்த்: பெர்கமாட் ஆயில் இரத்த லிப்பிட் செறிவுகளை சீராக்கி இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்தவும்  அதன் மூலம் இதய ஆரோக்கியத்தை காக்கவும் உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

8. ஓரல் ஹெல்த்: பெர்கமாட் ஆயில் வாய்ப் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவும். இதன் ஆன்டி மைக்ரோபியல் குணம் வாய்க்குள் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT