young age baldness 
ஆரோக்கியம்

இளவயது தலை வழுக்கைக்குக் காரணம் என்ன தெரியுமா?

மகாலெட்சுமி சுப்ரமணியன்

ன்றைய அவசர உலகில் ஆண்கள், பெண்கள் என பலருக்கும் தலை முடி உதிர்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் இளவயது ஆண்கள் பலருக்கு திருமணத்துக்கு முன்பே தலை வழக்கையாகி விடுவதை அதிகமாகக் காண்கிறோம். இதற்கு மரபணு, கம்ப்யூட்டர் – லேப்டாப் போன்றவற்றில் பணியின் நிமித்தம் பல மணி நேரம் மூழ்கி விடுவது, உட்கொள்ளும் சில மருந்து மாத்திரைகள், ஹேர் கலர் மற்றும் ஸ்டைலை அடிக்கடி மாற்றுவது, தரமில்லாத ஷாம்பூக்களைப் பயன்படுத்துவது, சமச்சீரற்ற உணவுப் பழக்க வழக்கம் போன்றவையே காரணங்களாகச் சொல்லப்படுகிறது. இப்படி இளவயதிலேயே முடி கொட்டி தலை வழுக்கையாகி விடுவது பலருக்கும் மன உளைச்சல் மற்றும் தோற்ற மாறுபாடுகள் பெரும் பிரச்னைக்குரிய விஷயமாக உள்ளது.

‘டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன்’ என்ற ஹார்மோன்தான் தலைமுடியின் பலத்தை நிர்ணயிக்கிறது. சிறு வயதிலிருந்தே நல்ல சத்தான உணவு, முடி பராமரிப்பு என இருந்தால் முடி அவ்வளவு எளிதில் கொட்டாது, வழுக்கையும் விழாது. தலையில் பொடுகு, அரிப்பு போன்ற உபாதைகளை அவ்வப்போது கவனித்து அதை சரிசெய்தல் முடி கொட்டுவது, வழுக்கை விழுவது தடுக்கப்படும். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியமாக, ‘ஹேர் பேக்’கை முயற்சிக்கலாம்.

வெந்தய சீரக பேஸ்ட்: வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் ஒரு டீஸ்பூன் சேர்த்து இரவு ஊற விடவும். மறுநாள் இதனுடன் கருவேப்பிலை சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து தலையில் வேர்க்கால்கள் படுமாறு தேய்த்து சற்று நேரம் கழித்து அலசிட முடி வலுப்பெறும். முடி கொட்டாமல் அடர்த்தியாக வளர‌ஆரம்பிக்கும்.

கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெய் ஒரு கப் எடுத்து அதில் மருதாணி இலையை நான்கு டீஸ்பூன் போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்ததும் இந்த எண்ணையை வடிகட்டி தலையின் வேர்க்கால்கள், முடியில் தடவி உச்சியில் மசாஜ் செய்து தினமும் தேய்த்து வர முடி வளர்ச்சி தூண்டப்படும். சொட்டை விழுந்த இடங்களிலும் முடி வளர ஆரம்பிக்கும். மேலும், வெந்தய, வெங்காய பேஸ்ட்டை தலையில் தடவி ஊறியதும் குளித்தால் முடி உடையாமல் வளரும். உப்பு தண்ணீரை உபயோகிக்காமல் நல்ல தண்ணீரில் முடியை அலச முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தலையில் வழுக்கை விழுந்த பிறகு முடியை சரி செய்ய நினைப்பதை விட, முன்னரே கவனமாக பராமரிக்க, முடி கொட்டாமல் முதுமையிலும் வழுக்கை விழாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT