தினசரி சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள், வேலைப் பளு, சமூகவியல் விதிமுறைகள் போன்றவற்றால் ஒரு மனிதனின் மனநிலை மாசடையவும், சக்தியை இழக்கவும் கூடும். அம்மாதிரியான மனநிலையிலிருந்து விடுபட்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும் ஐந்து வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
டெலிவிஷன் திரையிலிருந்தும், சோசியல் மீடியாவில் சாட்டிங் பண்ணுவது, செய்தி அனுப்புவது, பதிலுக்குக் காத்திருப்பது போன்ற வேலைகளிலிருந்தும் விடுபட்டு நேரத்தோடு படுக்கச் சென்றாலே பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் குறைந்து, மனம் லேசாவதோடு தூக்கமும் உடனடியாக கண்களைத் தழுவும்.
செடி, கொடி நிறைந்து பசுமையுடன் காணப்படும் இடங்களுக்குச் சென்று, அந்த இயற்கைச் சூழலில் சிறிது நேரத்தைச் செலவிடுவதால் மனம் அமைதி பெறும்; மன அழுத்தம் (stress) குறையும்; உடலும் மனமும் நல்ல மூடுக்குத் திரும்பும்.
பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களைச் செலவழித்து, அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி மெடிடேஷன் செய்வது மனம் அமைதியுற சிறந்த வழியாகும்.
ஒழுங்கற்ற மன நிலையை சரிப்படுத்த மற்றொரு சிறந்த வழி மனதில் உள்ள எண்ணங்களை எழுத்துருவில் கொண்டுவருவது. ஆம், ஒரு டயரியில் மனக் குமுறல்களையும் எண்ணங்களையும் மள மளவென்று எழுதி முடிக்கையில், மனம் அமைதியும் தெளிவும் பெறுவதோடு, சில பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.
மனம் தன்னைத்தானே சாந்தப்படுத்தி இழந்த சக்தியையும் புத்துணர்ச்சியையும் மீட்டெடுக்க பெரிதும் உதவுவது நல்ல தூக்கம். இடையில் தொந்தரவு ஏற்படுத்தாத, ஆழ்ந்த தூக்கம் பெற அட்டவணை ஒன்று தயாரித்து அதன்படி குறித்த நேரத்தில் படுக்கைக்கு சென்று குறித்த நேரத்தில் எழுந்து கொள்வது நல்ல பலனளிக்கும்.