தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக. 'அண்டிப்பருப்பு' என அழைக்கப்படும் முந்திரி பருப்பில் அதிகளவில் ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் புரோட்டீன், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், உடலுக்கு சக்தி அளிப்பதும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதுமான காப்பர், மாங்கனீஸ், பாஸ்பரஸ், சிங்க், மக்னீசியம், வைட்டமின் E, K, B6, கால்சியம் போன்ற பலவித சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.
இதில் நிறைந்துள்ள கரோட்டினாய்ட் மற்றும் பாலிஃபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றவும் உதவுபவை. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் வல்லது.
முந்திரி பருப்பில் உள்ள நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்தானாது, இரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துகிறது, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீராக வைக்கிறது. வைட்டமின் B 6, ஃபோலேட் ஆகியவை உடலின் மெட்டபாலிசம் ஆரோக்கியமாக நடைபெற உதவி இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவை குறையச் செய்கிறது. இதனால் இதயம் நல்ல ஆரோக்கியம் பெறுகிறது. இதய நோய் வரும் வாய்ப்புளும் குறைகிறது. கால்சியமும் மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மூட்டு வலி வராமல் தடுக்கிறது.
முந்திரி பருப்பு அதிக கலோரிகள் கொண்ட உணவாயிருந்தபோதும், இதிலுள்ள நல்ல கொழுப்பு, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தானாது அதிக நேரம் பசி தாங்கும் சக்தியைக் கொடுத்து, உடல் எடை கூடாமல் சமநிலையிலிருக்க உதவுகிறது.
காப்பர், கொலாஜென் அளவை அதிகரிக்கச் செய்யும் மெலனின் என்ற பொருளை உற்பத்தி செய்ய உடலுக்கு உதவுகிறது. இதன் மூலம் சருமம் ஆரோக்கியம் பெறுகிறது. முடி வளர்ச்சி மேன்மையடைகிறது. முடியின் நிறமும் இயற்கைத் தன்மை குன்றாமல் மிளிர்கிறது. முந்திரியிலிருந்து கிடைக்கக்கூடிய நற்பயன்களை அறிந்து, அவற்றை நல்ல முறையில் அளவோடு உட்கொண்டு நலம் பல பெறுவோம்.