சுவையான க்ரீமி மயோனைஸை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. மயோனைஸ் இல்லாமல் பர்கர், பீட்சா, மோமோஸ் போன்றவற்றை சாப்பிடுவது சுவையாக இருக்காது. இது போன்ற உணவுகளுக்கு சுவை சேர்க்கும் மயோனைஸை அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன உடல் நலக்கேடுகள் ஏற்படும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மயோனைஸ் முட்டை, எண்ணெய், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.
1. தினமும் அதிகமாக மயோனைஸை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால், சர்க்கரை வியாதி வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் மயோனைஸை தங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. மயோனைஸில் அதிகக் கலோரிகள் இருக்கின்றன. உணவில் அதிகமாக இதை சேர்த்துக்கொள்வதால் விரைவாக உடல் எடை அதிகரிக்கும். எனவே, உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் மயோனைஸை தவிர்ப்பது நல்லது.
3. மயோனைஸை அதிகமாக எடுத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மயோனைஸில் Omega 6 fatty acids அதிகமாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே, அதிகமாக உணவில் மயோனைஸை சேர்க்கும்பொழுது ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்புகள் உள்ளன.
4. ஒரு ஸ்பூன் மயோனைஸில் 1.6 கிராம் Saturated fat உள்ளது. எனவே, அதிகமாக மயோனைஸை சாப்பிடும்போது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய சம்பந்தமான நோய்கள் வரக்கூடும்.
5. மயோனைஸில் பயன்படுத்தப்படும் Preservatives மற்றும் செயற்கையான பொருட்களான MSG போன்றவை சேர்க்கப்படுவதால், உடல்நலக் குறைவு ஏற்படக் காரணமாக அமைகிறது. தலைவலி, குமட்டல் போன்ற பிரச்னைகள் அதிகமாக மயோனைஸை உண்பதால் ஏற்படுகிறது.
மயோனைஸ் பயன்படுத்துவதற்கு பதில் மசித்த அவகேடோ, தயிர் போன்றவற்றை உணவுடன் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமாகும். வீட்டில் செய்யக்கூடிய மயோனைஸை சரியாக சேமித்து வைக்கவில்லை என்றால் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மையோனைஸை விட முட்டை சேர்க்கப்படாமல் செய்யப்படும் Vegan மயோனைஸில் கொழுப்பு, கலோரிகள் சற்று குறைவாக உள்ளதால் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. எனினும், மையோனைஸில் ஆரோக்கியமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது சிறப்பாகும்.