முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாலில் மூன்று வெள்ளைப் பூண்டு பல்லை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் சருமம் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேன் முடிந்த வரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தலை முதல் கால் வரை நல்லெண்ணெய்யைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
ஓயாத பல் வலி இருந்தால் சுக்கு துண்டு ஒன்றை தூள் செய்து அதனுடன் கிராம்பையும் சேர்த்து மென்று விழுங்கினால் பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்தம் சுத்தம் செய்ய குங்குமப்பூ ஐந்து, கொஞ்சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிட நல்ல பலனைத் தரும்.
தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பு வராமல் தடுக்கும், இதயம் வலுவடையும்.
சிவப்புக் கரும்பு சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்ஸ் தேனை கலந்து வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். அதோடு சுத்தம் செய்த தூதுவளை கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து படுக்கப் போவதற்கு முன் குடிக்க ஆஸ்துமாவின் தீவிரம் குறையும்.
காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசா பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்க, நல்ல தூக்கத்தையும், உடல் நலத்தையும் கொடுக்கும்.
பாலுடன் பனங்கற்கண்டு, மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடித்தால் தொண்டைப்புண் குணமாகும். மூலநோய் தவிர்க்கப்படும்.
ஒரு துளி வெங்காயச் சாற்றினை இரண்டு நாசித் துவாரங்களிலும் இட்டுப் பாருங்கள். மூக்கடைப்பு உடனே குணமாகும்.
கருஞ்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இன்ஹேலரைப் பயன்படுத்துவது போல அடிக்கடி முகர்ந்து பாருங்கள் மூக்கடைப்பு குணமாகும்.
100 கிராம் கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து 200 கிராம் தேனில் குழைத்து வைத்துக்கொண்டு. தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர தொண்டைக் கமறல் குணமாகும்.
அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, மூக்கிணாங்கிழங்கு, இந்துப்பையும் எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து அதை 150 மில்லியாக வற்ற வைத்து மாதவிடாய் ஏற்படும் முதல் மூன்று நாட்கள் தினமும் இந்த நீரை வடிகட்டி சாப்பிட்டு வர மலட்டுத்தன்மை நீங்கிவிடும்.
வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட கக்குவான் இருமல் குணமாகும்.
தெரிந்தோ, தெரியாமலோ காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கு நிற்காமல் இருந்தால் கருவேலம் பிசின் தூளைக் காயத்தின் மீது தூவி விட்டால் இரத்த பெருக்கு உடனே நின்று விடும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி செம்பருத்தி பூவின் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.