மூளையை தின்னும் அமீபா https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

மூளையை தின்னும் பயங்கர அமீபாவிடமிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மீபா என்பது ஒரு செல் உயிரினத்தின் வகை. இது வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை. உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு மற்றும் நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் வாழும். இவை நீரில் மூழ்கிக் குளிக்கும்பொழுது சிலருக்கு மூக்கு வழியாக உடலுக்குள் சென்று விடும். அப்படியே மூக்கிலிருந்து மூளைக்குப் பயணித்து மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை உண்டாக்கும். பின்னர் இந்தத் தொற்று ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம் கூட நிகழலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, போதுமான குளோரின் கலக்கப்படாத நீச்சல் குளங்களிலும், நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் இறந்து விடுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

இதற்கான அறிகுறிகள்: மூளையை தின்னும் அமீபாவின் ஆரம்ப கால அறிகுறிகள் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஆகும். இந்த அமீபாக்கள் வேகமாக வளரக்கூடியவை என்பதால் இந்த அறிகுறி தென்பட்ட 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விடுகின்றனர். பொதுவாக, தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழி வகுக்கிறது என்று கூறப்படுகிறது.

உடலில் இந்த அமீபா வளரும்போது கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த வகையான தொற்று மிகவும் அரிதானது என்பதால் பாதிக்கப்பட்ட நபர் இறந்த பிறகுதான் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. தண்ணீர் நீண்ட காலமாக அதிக வெப்பநிலையில் இருப்பது, குறைந்த நீர்மட்டம் போன்றவை இந்த அமீபா தொற்றுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றன.

அமீபா தொற்று பாதிக்கப்படாமல் தற்காத்துக்கொள்ள:

1. நன்கு பராமரிக்கப்படாத குளங்களுக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்கலாம்.

2. தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவது நல்லது.

3. இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்குள் செல்கின்றது என்பதால் டைவ் அடிப்பது, குதித்து மூழ்குவது போன்றவற்றை தவிர்த்து விடலாம்.

4. நன்கு பராமரிக்கப்படாத தூய்மையற்ற நீர்நிலைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.

5. மாசடைந்த ஏரிகள் மற்றும் குளங்களில் குளிப்பதைத் தவிர்க்கலாம்.

6. நாம் செல்லும் நீச்சல் குளம் மற்றும் குளங்களில் போதிய அளவு கிருமி நாசினியான குளோரின் கலக்கப்பட்டு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

7. இந்தத் தொற்றுக்கு குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் நீர்நிலைகளுக்குச் செல்லும்பொழுது, ‘ஸ்விம்மிங் நோஸ் கிளிப்’ பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT