Is it dangerous to drink too much water? 
ஆரோக்கியம்

அதிகமாகத் தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தாகுமா?

நான்சி மலர்

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்று சொல்வார்கள். அது எதற்கு  பொருந்துகிறதோ இல்லையோ தண்ணீருக்கு நன்றாகப் பொருந்தும். சிலர் தண்ணீரை போதிய அளவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படும். இன்னும் சிலரோ அளவுக்கு அதிகமாக தண்ணீரை எடுத்துக்கொள்வதால், Water intoxication போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தண்ணீர் நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். நம் உடலில் உள்ள பாகங்கள் தண்ணீரால்தான் இயங்குகின்றன. சரியான அளவில் தண்ணீர் எடுத்துக்கொள்வதால், நம் உடலின்  வெப்பம் சரியாக இருக்க உதவுகிறது, வயிற்றுப்போக்கு ஏற்படாமல் காக்கிறது, உடலில் உள்ள கெட்ட அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

எனினும், தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதும் உடலுக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது சோடியம் வியர்வையின் மூலம் அதிகமாக வெளியேறும். அச்சமயம் அளவிற்கு அதிகமாகத் தண்ணீரை எடுத்துக்கொள்வது ஆபத்தாகும். இதற்கு பெயர்தான் Hyponatremia ஆகும். அதிகமாகத் தண்ணீரை எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் உள்ள சோடியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.

இதனால் சோடியத்தின் அளவு உடலில் குறைந்து செல்கள் வீங்குவதற்குக் காரணமாக அமைகிறது. இது மூளையில் உள்ள செல்கள் வீங்குவதற்கும் வழிவகுக்கும். இதை சரியாக கவனிக்கவில்லை என்றால் இறப்பு வரை கூட வாய்ப்புகள் இருக்கிறது. இது அதிகமாக விளையாட்டு வீரர்கள், மலையேற்றம் செய்பவர்கள், ராணுவத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படும்.

மராத்தான் விளையாட்டு வீரர்கள் சில சமயங்களில் அதிக தண்ணீர் குடித்து விடுவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். சில மருந்துகளை எடுத்துக்கொள்வதால், அதிகமாக தாகம் எடுக்கும். அச்சமயம் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் நோயாலும் இப்பிரச்னை வரக்கூடும். சர்க்கரை வியாதி, இதயம் செயலிழக்கும்போது உடல் தண்ணீரை தக்கவைத்துக் கொள்வதால் இதுபோன்ற பிரச்னைகள் வரும்.

எனவே, ஒரு நாளைக்கு 9 முதல் 13 கப் வரை தண்ணீரை எடுத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் தண்ணீர் இருப்பதை மறக்க வேண்டாம். சிறுநீர் கழிக்கும்போது நிறமற்று வந்தால் அதிகமாகத் தண்ணீரை எடுத்துக் கொண்டதாக அர்த்தம். இதனால் குமட்டல், வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றவை வரலாம். இதை சரிசெய்ய எப்போதெல்லாம் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டி வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு சிட்டிகை உப்பை அதில் சேர்த்துக்கொள்வது Electrolyte balance செய்ய உதவுகிறது.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT