குளிர்காலம் என்றாலே உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே நாம் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் செரிமானக் கோளாறு, குளிர் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. இச்சமயத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. குளிர்காலத்தில் இஞ்சியின் பயன்பாடு மிகவும் பிரபலமானது. இதை தேனீராக மட்டுமின்றி உணவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி நம் உணவின் சுவையை கூட்டி ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கிறது.
இஞ்சியின் நன்மைகள்:
குளிர்காலத்தில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து இஞ்சி நம்மை விடுவிக்கிறது. மேலும் இதனால் நோயை எதிர்த்து போராடும் ஆற்றலும் அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் இஞ்சி நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் எனலாம். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இஞ்சியை ஒரு அளவுக்குதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு ஐந்து கிராம் வரை இஞ்சி சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்து இன்சுலின் உற்பத்தியை குறைக்க முடியும்.
இஞ்சியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்பு அதிகம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால், குளிர்காலத்தில் நோய்கள் அண்டாமல் நம்மை பார்த்துக் கொள்கிறது.
குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு உடல் வலி, தசை வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் இஞ்சி உட்கொள்ளும்போது அந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். குளிர்காலத்தில் இஞ்சியை பயன்படுத்தி தயாரிக்கும் கஷாயங்களை உட்கொள்வதால், உடல் வலிமை பெற்று எவ்விதமான நோய்களும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும் என்பது சுகாதார நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
இஞ்சியால் ஏற்படும் பாதிப்புகள்:
என்னதான் இஞ்சி உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், அதை அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், உடல் சூடு போன்ற பாதிப்புகளைக் கொடுக்கும். எனவே சரியான அளவு இஞ்சி பயன்படுத்தினால், அதன் ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற்று உடல் பலத்துடன் இருக்க முடியும்.
எனவே இஞ்சியை சரியான முறையில் பயன்படுத்தினால் வரமாகவும், அதிக அளவு பயன்படுத்தும் போது சாபமாகவும் அமைகிறது.
(Disclaimer - இங்கே கொடுக்கப்பட்டுள்ள உடல்நலம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை நீங்கள் பின்பற்ற முடிவெடுப்பதற்கு முன்பாக தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.)