Kothavaranga Benefits.  
ஆரோக்கியம்

கொத்தவரங்கா பத்தி இத்தனை நாள் தெரியாம போச்சே!

கிரி கணபதி

கொத்தவரங்கா என்ற காய்கறி இருப்பது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை எத்தனை பேர் உணவில் சேர்த்து கொள்கிறீர்கள்? தினசரி வெறும் 10 கிராம் அளவு நம் உணவில் கொத்தவரங்காய் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகளை வழங்குகிறது. 

கொத்தவரங்காயில் நார்ச்சத்தும், பொட்டாசியம் சத்தும் அதிகம் இருப்பதால் இதயத்தை பாதுகாக்கும் அரணாக இருக்கிறது. அதே நேரம் ஆஸ்துமாவை குணமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்கின்றனர். 

உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொத்தவரங்காவுக்கு உண்டு. ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் கொத்தவரங்கா சாப்பிடுவது நல்லது. எனவே தினசரி கொத்தவரங்கா சமைத்து சாப்பிட்டால் செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.

குறைந்தது, வாரத்திற்கு இருமுறையாவது உங்கள் உணவில் கொத்தவரங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்யும். 

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு கொத்தவரங்காய் சாப்பிடக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். 

சருமம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் அவற்றை எதிர்த்து போராட உதவும். இதில் நிறைந்திருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அல்சர் போன்றவற்றை குணமாக்கும். 

ரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் கொத்தவரங்காய் சாப்பிட்டால் திடீரென ரத்த சர்க்கரை உயிரும் பிரச்சனை இருக்காது. இது நீரிழிவு நோயுடன் எதிர்த்து போராடுவதற்கு உதவும் காய்கறியாகும். 

அதேபோல ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்களும் கொத்தவரங்காய் அடிக்கடி சாப்பிடலாம். இதற்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதால் ரத்த சோகையை நீக்கி உடலை பழைய நிலைக்கு கொண்டு வரும்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT