ஆரோக்கியம்

மனசோர்வு இல்லாத வாழ்வுக்கு உறக்கமே உறைவிடம்; யார் யார் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?

பாரதி

ன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் மக்களும் சரி வீட்டில் இருக்கும் மக்களும் சரி எப்பொழுதும் எதாவது மன உளைச்சலிலேயே தான் இருக்கின்றனர். காரணமே இல்லாமல் மனதளவில் சோர்வடைகின்றனர். பின் மனசோர்வு உடற்சோர்வாகிறது. மன சோர்வில்  வேலைக்கு செல்லும் ஆண்கள் தன் குடும்பத்தினரிடம் காண்பிக்கின்றனர். அவர்கள் “இவர் வேலை டென்ஷனில் உள்ளார்“ என்று கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

ஆனால் உண்மையில் அதனால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பது அவர்களுக்கே தெரியும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனசோர்வு ஏற்பட்டால் ஆசையுடன் அணைக்க வரும் குழந்தைகளிடம் எரிந்து விழுகின்றனர். அதேபோல் குழந்தைகளுக்கு மனசோர்வு ஏற்பட்டால் யாரிடமும் பேசாமலும் நண்பர்கள் வைத்துக் கொள்ளாமலும் தன்னை தனிமையாக்கிக்கொள் கின்றனர். இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான படுமோசமான நிலைகளைத் தருகின்றன.

மனசோர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உணவு வகை மற்றொன்று தூக்கம். ஒரு மனிதனுக்கு தூக்கமே இல்லையென்றாலும் தவறு. தூக்கம் அதிகம் இருந்தாலும் தவறுதான். அடிக்கடி தூங்குவதால் உடலும் மூளையும் மந்த நிலைக்கு செல்கிறது. தூக்கம் சுத்தமாக இல்லையென்றால் உடலும் மனமும் சோர்வு நிலைக்கு செல்கிறது. அந்தவகையில் எந்தெந்த வயதுடையவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

4 -12 மாதக்குழந்தைகள் ஒரு நாளிற்கு 12 மணியிலிருந்து 16 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.

1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 11 மணியிலிருந்து 14 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

3 வயதிலிருந்து 5 மணிவரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு பத்திலிருந்து 13 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

6 வயதிலிருந்து 12 வயதுவரை உள்ள குழந்தைகள் 9 முதல் 12 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

13 வயதிலிருந்து 18 மணி வரை உள்ள சிறுவர்கள் எட்டிலிருந்து 10 மணிநேரம்வரை உறங்க வேண்டும். 

18 வயதிலிருந்து 63 வயதுவரை உள்ள ஆட்கள் ஏழு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் உறங்க வேண்டும்  .

64 வயதிற்கு மேல் உள்ளவர்கள் குறைந்தப்பட்சம் ஏழு மணிநேரமாவது உறங்க வேண்டும்.

மேலும் முதிர்ச்சி காரணமாக வயதானவர்கள் தூக்கத்தில் அடிக்கடி எழுந்துவிடுவர். பெண்களின் கர்ப்பகாலத்தில் சில ஹார்மோன்கள் மாற்றத்தால் தூக்கமின்மை ஏற்படும். ஆகையால் அந்த காலக்கட்டங்களில் சரியான தூக்கம் இல்லையென்றால் பெரிதாக நினைத்துக்கொள்ள அவசியம் இல்லை.

இப்போது தூக்கமின்மை மக்களிடையே  பெரும் குறைப் பாடாகத்தான் உள்ளது. இரவு முழுவதும் மொபைல் போன்ஸ் பார்ப்பது தூக்கமின்மையை அதிகரிக்கும்.

ஒருவேளை மெத்தையில் படுத்தும் தூக்கம் வரவில்லை யென்றால் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு உறங்கலாம். மேலும் இரவு மிதமான உணவே உட்கொள்ள வேண்டும்.

மனஉளைச்சல், மன சோர்வு இல்லாமல் வாழ்வதற்கு சரியான தூக்கம், சரியான உணவே போதுமானது. குடும்பத்துடனும் நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாகப் பார்த்துக்கொள்வது நம்முடைய கடமை என்றால் . அந்த கடமையை சரிவர செய்வதற்கு  நல்ல உறக்கமே தூண்டுக்கோள் அமைகிறது.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT