மிகவும் எளிய, ஆனால் சக்தி வாய்ந்த உடற்பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சிதான். இது மிகவும் சிறப்பானதும் கூட. ஒருவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 15 நிமிடங்கள் வேகமாய் நடப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
* தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பதால் இதயம் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் குறைந்தும் காணப்படும்.
* நடைப்பயிற்சி மனதுக்கு இனிமை கொடுப்பதோடு நம் உடலில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
* தினமும் 15 நிமிடங்கள் வேகமாக நடப்பதால் ஒட்டுமொத்த மனநிலையையும் மன அழுத்தத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
* உடற்பயிற்சி மூளையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜனை அதிகரிக்க செய்கிறது. இது செரோடோனின் மற்றும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் இரசாயனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* நடைப்பயிற்சி நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு நினைவிழப்பு ஏற்படாமல் தடுத்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. அல்சைமர்ஸ் நோய் என்ற மறதி நோயை தடுக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது.
* தினமும் 15 நிமிடம் வேகமான நடைப்பயிற்சியால் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைந்து ஆற்றலை அதிகரிக்கிறது.
* உடற்பயிற்சி கை, கால்களில் உள்ள தசைகள், எலும்புகளை, வலுவாக்கி எலும்பு புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
* 15 நிமிட நடைப்பயிற்சி உறங்குவதில் உள்ள சிரமத்தைக் குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்கிறது. வேகமாக நடப்பது தூக்கமின்மை வியாதிக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
* நடைப்பயிற்சி மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசால் ஹார்மோன் அளவை குறைக்கிறது. நடைப்பயிற்சி புத்தம் புது காற்றை சுவாசிக்க உதவி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
* இள வயதில் வேகமான பயிற்சிகளின் மேல் ஆர்வம் கொண்டவர்கள் வேகமாக நடக்க ட்ரெட்மில் பயன்படுத்துவதை விட, மலைகளில் நடக்கலாம். இதனால் முழங்கால்கள், இடுப்பு, கணுக்கால் மற்றும் கீழ் உடல் தசைகளில் வலிமை மற்றும் நிலைத்தன்மை உருவாக்கச் செய்யும்.
* தினசரி 15 நிமிடங்கள் நடப்பதால் கவனம் அதிகரித்து உற்பத்திதிறன் மற்றும் படைப்பாற்றல் மற்றும் புதிய சிந்தனைகளை அதிகரிக்கிறது.
* அமர்ந்து யோசிப்பதைக் காட்டிலும் நடந்துகொண்டே யோசிப்பது மிகச் சிறந்தது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சூரிய ஒளியில் நடப்பதால் அறிவாற்றல் மேம்படுகிறது.
உடலுக்கு எண்ணிலடங்கா நன்மைகளைக் கொடுக்கும் 15 நிமிட நடைப்பயிற்சியை மேற்கொண்டு, ஒவ்வொருவரும் நோய் வருமுன் காப்போம், நோயை விட்டு விலகுவோம்.