Foods Eating 
ஆரோக்கியம்

அளவுக்கு மீறினால் இவைகூட விஷமோ?

A.N.ராகுல்

ஆரோக்கியமான உணவு எது என்று எடுத்துக்கொண்டால், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே பெரும்பாலும் சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் அது ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டு, சிறந்த தரத்திலான பொருட்களால் உருவாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையே. இருந்தாலும் எதற்கும் ஓர் அளவுண்டு இல்லையா? அப்படி மிதமான அளவிலே உட்கொள்ள வேண்டிய சில வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. பழச்சாறுகள்:

வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் அதைச் சார்ந்த கலவைகளில் வைட்டமின்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆரோக்கியத்தைப் பெற சிறந்த வழியாகும். இருப்பினும், அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இது எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்.

2. முழு தானிய ரொட்டிகள் (Whole Grain Breads and Pastries):

முழு தானியங்களைப் பயன்படுத்தி வீட்டில் ரொட்டி மற்றும் அதைச் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பது கடையில் வாங்கும் பொருட்களைவிட மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். காரணம் முழு தானியங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆரோக்கியமான சரியான எடையைப் பராமரிக்க உதவுகிறது. இருப்பினும், அதிகப்படியாக உட்கொண்டால், வாயு போன்ற செரிமானப் பிரச்னைகள் பல நாட்கள் தொடர வழிவகுக்கும்.

3. சூப்கள் மற்றும் குழம்புகள் (Soups):

வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப்கள் சத்தானவை. மேலும், இவற்றை உங்கள் சுவைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளவும் முடியும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின்(Minerals) நல்ல மூலமாகும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் அதிகப்படியான சோடியம் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

4. சாலடுகள்:

சாலடுகள், அனைத்து காய்கறிகளின் ஊட்டசத்தையும் உள்ளடக்கிய ஓர் சிறந்த உணவாகும். அவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இருந்தும் சாலட்களை அதிகமாக சாப்பிடுவதால் அதிக கலோரிகள் உங்கள் உடலில் சேர்க்கப்பட்டு, உங்கள் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

5. தயிர் (Yogurt):

வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களில், கடையில் வாங்குவதை ஒப்பிடும்போது சில அதிகப்படியான சர்க்கரைகள் மற்றும் செயற்கை பொருட்கள் சேர்ப்பது தவிர்க்கப்படுகிறது. இந்த புரோபயாடிக்(probiotic) நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. இருப்பினும், அதிகமாக உட்கொள்வது செரிமான அசௌகரியம் மற்றும் சில சந்தர்ப்பங்களில், குடல் பாக்டீரியாவில் ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்தலாம்.

6. எனர்ஜி பார்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் (Energy Bars and Snacks)

வீட்டில் தயாரிக்கப்படும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் தின்பண்டங்கள் கடையில் வாங்குவதைக் காட்டிலும் ஆரோக்கியத்திற்கான சிறந்த மாற்றாக இருக்கும். அவை நட்ஸ், விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றின் கலவையால் நிரம்பியுள்ளன. இருப்பினும் அதிக கலோரி உட்கொள்ளல் சில நேரங்களில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

7. இயற்கை மூலிகைகளால் ஆன தேநீர் (Green Tea)

வீட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மூலிகைகள் நிறைந்த தேநீர் நீங்கள் நீரேற்றத்துடன் இருக்கவும் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும். இருப்பினும், அதிகமாக தேநீர் குடிப்பது, குறிப்பாக காஃபின்(caffeine) கொண்டவை, தூக்கமின்மை, பதற்றம் மற்றும் செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மக்களே! அளவுக்கு மீறினால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளும்கூட...

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT