Some tips to get rid of skin wrinkles 
ஆரோக்கியம்

சருமச் சுருக்கங்களைப் போக்க சில எளிய ஆரோக்கிய வழிகள்!

நான்சி மலர்

சுற்றுச்சூழல் பாதிப்பு பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் பலருக்கும் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் சவாலான ஒன்றாகத்தான் உள்ளது. என்னதான் நேரம், பணம் என்று செலவழித்தாலும் நாம் எதிர்ப்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி இயற்கையாகவே இளமையான சருமம் பெறுவதற்கு வழி இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

வயதாக ஆக சருமம் சுருக்கம் அடைவது, வறட்சியடைவது  கருமையடைவது என்பது சகஜமாக உள்ளது. இதை சரிசெய்வதற்கு நம்முடைய உள் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். தண்ணீர் அதிகமாகக் குடித்து உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

காலை ஒரு வேளை உணவு எடுத்துக்கொள்வது மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமே நல்லதாகும். தினமும் காலை வேளை உணவு எடுத்துக்கொள்வதில் கட்டாயம் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அது மட்டுமில்லாமல், ஒரு அரை மூடி தேங்காயை காலை உணவுடன் எடுத்துக்கொண்டு வந்தால் சருமப் பிரச்னைகளான சுருக்கம், கருமை நீங்கி இளமையை பெறலாம். ப்ளூ பெர்ரி, மாதுளை, அவகேடோ, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், சருமத்தை பாதுகாக்கிறது.

Dark chocolateல் 70 சதவீதம் கொக்கோ உள்ளது. இது நம் உடலில் வயதாகும் பண்புகளைக் குறைக்கக்கூடியதாகும். தினமும் ஒரு சிறிய அளவிலான Dark chocolateஐ எடுத்துக்கொள்வது சருமத்தில் ஈரப்பதத்தையும், இரத்த ஓட்டத்தையும் அதிகரித்து சருமத்தில் இளமையை தக்க வைக்க உதவுகிறது.

இதுபோன்ற இயற்கையான உணவுகளை எடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதேபோல, தவிர்க்க வேண்டிய உணவுகளும் இருக்கின்றன. அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வது, எண்ணெய் உணவுகள், Processed foods, இனிப்பான குளிர்பானங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது சீக்கிரமே வயதாவதற்கு வழிவகுக்கிறது.

எனவே, இளமையான சருமத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள் என்றால் இயற்கை உணவுகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம், ஓய்வு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு கண்டிப்பாக நம் சருமப் பராமரிப்பில் அதிக பங்கு வகிக்கிறது என்பது உண்மை. எனவே, இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி என்றென்றும் இளமையாக இருங்கள்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT