மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெங்குடல் புற்றுநோய் மற்றும் விந்துப்பை புற்றுநோய் ஆகியவை பெரும்பாலான நபர்களை தாக்க கூடிய புற்றுநோய் வகைகளாக உள்ளன.
புற்றுநோய் சிகிச்சையின் முக்கிய தடையாக இருப்பது நோய் கண்டறிதல் ஆகும், புற்றுநோய் செல்கள் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை புற்றுநோய் செல்கள் அடைந்து விடுகின்றன. ஆகவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
உடல் எடை குறைதல்
உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறியாகும். காரணமின்றி உங்கள் உடல் எடை குறையும் போது கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்வது அவசியமாகும்
மார்பகத்தில் மாற்றங்கள்:
மார்பகத்தின் நிறம், வடிவம் மாறினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
சோர்வு
புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் வலுவிழக்க செய்து, ஆற்றலை உறிஞ்சி விடுகிறது. இதனால் அந்த நபருக்கு சோர்வு அதிகமாகவே இருக்கும்.
கண்களில் வலி
கண்களை யாரோ குத்திவிட்டது போன்ற கடுமையான வலி தோன்றுவது. கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறி ஆகும்.
உடலில் தடிப்பு ஏற்படுதல்
லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில், உடல் முழுவதும் தடிப்புகள் காணப்படும்
அடிக்கடி தலைவலி
ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி படிப்படியாக அதிகரித்து தொடர்ந்து வரும் எனில் அது புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும்,. இது பிரைன் ட்யூமரின் ஆரம்ப அறிகுறியாகும்.
அதீத வலியுடன் கூடிய மாதவிடாய்
வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான அதிக ரத்த கசிதல், தாங்கி கொள்ளாத வலியை மாதவிடாய் சமயங்களில் உணர்ந்தால் அது எண்டோமெட்ரியல் கேன்சருக்கான அறிகுறியாகும்.
பிற அறிகுறிகள்
பிறப்புறுப்பில் வீக்கம், உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமம், வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, காய்ச்சல் மற்றும் நகங்களில் மாற்றங்களும் கேன்சருக்கான அறிகுறியாகும்.