நம் அன்றாட சமையலில் கிராம்பை உணவுக்கு மணமூட்டியாக பயன்படுத்துவோம். ஆனால், கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது தெரியுமா? கிராம்பை பல ஆண்டுகளாக பாரம்பரியமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கிராம்பு எண்ணெய் பல் வலிக்கு நிவாரணியாகப் பயன்படுகிறது. இதில் இருக்கும் Eugenol நுண்ணுயிரை எதிர்த்து வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரிசெய்ய உதவுகிறது. இது பாக்டீரியாக்களை கொன்று ஈறு சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது.
2. கிராம்பு எண்ணெய் இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3. கிராம்பு எண்ணெய் அருமையான Stress reliever ஆக பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை பயன்படுத்தும்போது மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல் உறக்கத்தை தூண்டிவிடுவதால், தூக்கமின்றி கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
4. கிராம்பு எண்ணெய் வலி நிவாரணியாக செயலாற்றுகிறது. Arthritis, வாதநோய், தசைவலி, சுளுக்கு போன்றவற்றை குணமாக்க இந்த எண்ணெய்யை உபயோகிக்கிறார்கள்.
5. கிராம்பு எண்ணெய்யில் இருக்கும் Eugenol பூச்சிகளை விரட்டக்கூடிய தன்மையைக் கொண்டது. Eugenolல் உள்ள பூஞ்சை எதிர்ப்புசக்தி செடிகளில் ஏற்படும் பூஞ்சை நோயையும் குணப்படுத்த உதவுகிறது.
6. கிராம்பு எண்ணெய் சருமப் பிரச்னைகளுக்கும் வெகுவாக பயன்படுகிறது. சருமத்தில் உள்ள Acneயை குணப்படுத்துகிறது. சருமம் புத்துயிர் பெறவும், வயதாவதைத் தடுக்கவும் உதவுகிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்கிறது, வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
7. கிராம்பு எண்ணெய் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது. இருமல், சளி, ஆஸ்மா, சைனஸ், வறண்ட தொண்டை மற்றும் காசநோய் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
8. கிராம்பில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் தடுக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் உணவில் கிராம்பை சேர்த்துக்கொள்வது நல்லதாகும்.
9. தலைவலிக்கு கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெய்யை தலையில் தடவிக்கொள்வது, பாலில் கிராம்பு போட்டு குடிப்பது தலைவலியை குணப்படுத்துகிறது. எனவே, கிராம்பு எண்ணெய்யை அளவாகப் பயன்படுத்தி வருவது உடல் சம்பந்தமான பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.