This one rice is enough..say goodbye to body problems! Image Credits: Times of India
ஆரோக்கியம்

இந்த ஒரு அரிசி போதும்; உடலில் உள்ள பிரச்னைகளுக்கு குட் பை சொல்லிடுங்க!

நான்சி மலர்

ம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்கவும் இந்த ஒரு அரிசி இருந்தால் போதும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம். அத்தனை சத்துக்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் அந்த அரிசி வேறு எதுவுமில்லை மூங்கில் அரிசிதான். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மூங்கில் அரிசியை முலையாரி (Mulayari) என்றும் அழைப்பார்கள். இது காய்ந்த மூங்கில் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய அரிசியாகும். இந்த அரிசியில் அதிக சத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மூங்கில் அரிசி பார்ப்பதற்கு அரிசி போன்று இருந்தாலும் அதன் சுவை கோதுமையின் சுவையை போல் இருக்கும். இதில் லேசான இனிப்பு சுவையும் இருக்கும். இதை அரிசி போலவே சமைத்து சாப்பிடலாம். பெரும்பாலும் பொங்கல் சமயத்தில், இந்த அரிசியில் கிச்சடி செய்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூங்கில் அரிசியில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. இந்த அரிசியை உண்பதால், பெண்களுக்கு இனப்பெருக்கம் மற்றும் கருவுறுதலுக்கு மிகவும் உதவுகிறது. மூங்கில் அரிசியில் அதிகமாக கால்சியம் இருப்பதால், எலும்பு அடர்த்தியாவதற்கு ஏற்றது. இதனால் எலும்பு சம்பந்தமான நோய்களான மூட்டு வீக்கம், முட்டி வலி, வாத நோய், முதுகெலும்பில் ஏற்படும் வலி ஆகியவற்றை சரிசெய்ய முடியும்.

இந்த அரிசியில் Glycemic index குறைவாக உள்ளதால், சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து அதிகமாக இருப்பதால் இதய பாதுகாப்பிற்கு நல்லது. அதனால், மூங்கில் அரிசியில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும், செரிமான அமைப்பிற்கும் உதவுகிறது.

மூங்கில் அரிசியில் குறைவான கொழுப்பு இருப்பதால், இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மூங்கில் அரிசி ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகிற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் Skin soothing Properties உள்ளதால் ஸ்க்ரப் பற்றும் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

மூங்கில் அரிசியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்ததாகும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு சீராகும் என்று சொல்லப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமாக மூங்கில் அரிசியின் உற்பத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT