சிலருக்கு திடீரென கை கால்களில் நடுக்கம் ஏற்படும். அதே நேரம் ஞாபக சக்தி குறைவது போல இருக்கும். இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்.
வைட்டமின் பி12 நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்களில் ஒன்று. இது நம் உடலில் குறையும்போது நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாகவே ஞாபக சக்தி குறைவு கை கால் நடுக்கம் போன்றவை ஏற்படும். ஒருவேளை உங்களுக்கு திடீரென கை கால்களில் அசைவு ஏற்பட்டால், அது சாதாரணமாக ஏற்படுவது என நினைக்க வேண்டாம்.
இதனால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து நோயாளிகளின் கால்களும் கைகளும் அவர்களின் கட்டுப்பாடின்றி அசையத் தொடங்கும். ஏதாவது வேலை செய்யும்போதும் கைகள் நடுங்கும். இதைப் போக்குவதற்கு உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை கேட்கவும். இது பெரும்பாலும் வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் என்பதால் அது அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
நமது உடலில் உள்ள நரம்பு மண்டலம் ஒரு மிகப்பெரிய குழுவாக இருப்பதாகும். இதில் மூளை மற்றும் முதுகுத்தண்டு நரம்புகளின் இணைப்பும் அடங்கும். வைட்டமின் பி12 குறைபாட்டால் இதன் தொடர்புகள் பலவீனமடைந்து மூளையின் சிக்கல்களைப் பெற சிரமப்படும். இந்த குறைபாடு நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து கைகளில் நடுக்கம் ஊசி குத்துவது போன்ற உணர்வு நினைவாற்றல் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
இதுபோன்ற அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள் என பார்க்கும்போது முட்டையில் இது அதிகம் உள்ளது. தினசரி இரண்டு முட்டைகள் சாப்பிடும்போது நமது தினசரி பி12 தேவையில் பாதி பூர்த்தி அடைகிறது. அதேபோல பாலிலும் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, புரதம், கால்சியம், பி12 ஆகியவை அடங்கியுள்ளது.
இத்தகைய வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் உங்களை ஆரோக்கியமாக்கி மூளையையும் கூர்மையாக்குகிறது. எனவே நீங்கள் தினசரி சாப்பிடும் உணவுகளுடன் வைட்டமின் பி12 இருக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.