ஆரோக்கியம்

சருமப் பிரச்னைகளுக்கு நிவாரணியாக விளங்கும் வேம்பாளம் பட்டை!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

பெண்களின் தலையாய கவலைகளில் ஒன்று சருமப் பிரச்னை. சருமப் பிரச்னையாலேயே பெண்களுக்கு தலைமுடி உதிர்வும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, முடி உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை, அரிப் பு போன்ற கூந்தல் பிரச்னைகளுக்கும்  சரும ஆரோக்கியக் குறைவே காரணமாக உள்ளன. இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக  விளங்குகிறது வேம்பாளம் பட்டை. இது பட்டை வடிவிலும், பொடியாகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இந்தப் பட்டையை தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி வர, தலையில் ஏற்பட்டுள்ள சருமப் பிரச்னைகள் குணமாவதோடு, கேசப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது. வேம்பாளம் பட்டை சிவப்பு இயற்கை நிறமூட்டியாக உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. களையிழந்த சருமத்தை மீண்டும் பொலிவு நிறைந்ததாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டது வேம்பாளம் பட்டை. இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுக்கள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி தன்மை தீக்காயங்களை விரைவாக ஆற்றும் குணம் கொண்டது. வெயிலால் ஏற்படும் கருமை மற்றும் தடிப்பு, அரிப்பையும் இது குணமாக்குகிறது.

‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள், சரும வடுக்கள் போன்றவற்றுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இந்தப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் போன்றவை குணமாகும். சிறுநீரகக்கல், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவுகள் போன்றவற்றுக்கும் இதனை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வேம்பாளம் பட்டை பொடியை வெண்ணையுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் விரைவாக குணம் கிடைக்கும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து தேங்காய் எண்ணையுடன் கலந்து காயங்கள் மேல் பற்றாப் போட அவை விரைவில் குணமடையவும் , வலி குறையவும் உதவும்.

வேம்பாளம் பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைவலியை குறைக்கும். இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்னைகளை தீர்க்கிறது. இந்த எண்ணெய் மன அமைதியைத் தரும். நிம்மதியான உறக்கத்திற்கு ஆயுர்வேத மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT