நன்னிலம் இளங்கோவன்
தமிழ்ச் செம்மல், நன்னிலம் இளங்கோவன், எழுத்தாளர், மயிலாடுதுறை. அரசுப் பணியிலிருந்து ஓய்வு.
இரண்டு கவிதை நூல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள்,
ஒரு கட்டுரை நூல் இதுவரை எழுதியுள்ளேன். முகநூல் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை, கேரள அரசின், 09-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் இடம் பெற்றுள்ளது. அதேபோன்று 'முகங்கள்' என்ற சிறுகதை கேரள அரசின் 08-ம் வகுப்பு தமிழ் பாடநூலில் இடம் பிடித்துள்ளது.
2023-ம் ஆண்டிற்கான, 'தமிழ்ச் செம்மல்' விருது எனக்கு தமிழ்நாடு
அரசு வழங்கி சிறப்பித்துள்ளது. 2017-ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம், எனது சிறுகதையை ப் பாராட்டி 'சிந்தனைச் சிகரம்' என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.