தேவகி கருணாகரன்

எழுத்தாளராக எமது தமிழர் மத்தியில் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் தேவகி கருணாகரன். அவரது சிறுகதைகள் தமிழ் நாட்டின் கல்கி, கலைமகள், கணையாழி, குமுதம், காக்கைச்சிறகினியிலே சஞ்சிகைகளிலும், சிறீலங்காவின் ஞானம் சஞ்சிகையிலும்,  தினக்குரல்,  வீரகேசரி பத்திரிகையிலும், நடு, பதிவுகள், வணக்கம் லண்டன், காற்றுவெளி இணைய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஞானம் சஞ்சிகையில் அட்டைப்பட அதிதியாக கெளரவமும் பெற்றவர். இவர் பல சிறுகதை போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளார். அவர் எழுதிய குறுநாவlல் `யாழினி`சென்னையில் பிரசித்திப் பெற்ற, ஸீரோ டிகிரி நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது.
Connect:
தேவகி கருணாகரன்
logo
Kalki Online
kalkionline.com