உ. மணிகண்டன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். தளராது பல்லாயிரம் ஆண்டுகள் நடைபோட்டு வந்த தமிழ் இப்போது ஆங்கில கலப்பினால் தள்ளாடு வதை தாங்கிக் கொள்ள முடியாது தன்னால் இயன்ற அளவு எளிதாகப் புரியும்படி புனைவு, அதிபுனைவு, அறிவியல் அதிபுனைவுக் கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக தமிழை மக்களிடத்தே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.