

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான கவாசாகி (Kawasaki) மோட்டார் சைக்கிள்கள், ATVகள், ரோபோக்கள், கப்பல்கள், ரயில்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட பல்வேறு வகையான பொறியியல் தயாரிப்புகளை தயாரிக்கிறது. மேலும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பிற்கு மிகவும் பிரபலமான கவாசாகியின் "நிஞ்ஜா" மற்றும் "ஜெட்கி" போன்ற தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களைக் கொண்டுள்ள கவாசாகியின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம், நிஞ்சா 650 என்ற புதிய மேம்படுத்தப்பட்ட பைக்கை புதிய நிறங்களுடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதனை 2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக வெளியிட்டுள்ளது. நிஞ்சா 650, அதன் ஸ்டைலான தோற்றம், சக்திவாய்ந்த 649 சி.சி. பேரரல் டிவின் என்ஜின், மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு வசதியான, சவாரிக்கு ஏற்றது. 2023 கவாசகி நின்ஜா 650 மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் மட்டும் முந்தைய மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
Sports Bike வாங்கினால் மட்டும் போதாது! அதை ஓட்டும் பொழுது நம் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க சிறந்த தலைக்கவசமும் (Helmet) வாங்க வேண்டும்! உடனே வாங்க...
மேலும் இந்த பைக் தினசரி பயன்பாட்டிற்கும், ஸ்போர்ட்ஸ் ரைடிங்கிற்கும், கரடுமுரடான சாலைகளில் ஓட்டுவதற்கும், நெடுதூரம் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள 649 சி.சி. பேரரல் டிவின் என்ஜின் அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்.பி.எம்.மில் 68 எச்.பி. பவரையும், 6,700 ஆர்.பி.எம்.மில் 62.1 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 15 லிட்டர் பெட்ரோல் பேங்க் மற்றும் பைக் சீட் 790 மிமீ உயரத்துடன் வருகிறது. 2026 மாடல்கள் E20 பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன, இது இந்தியாவிற்கான முக்கியமான அப்டேட்.
இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. முன்புறம் 41 டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. இரண்டு புறமும் டிஸ்க் பிரேக், எல்இடி இலுமினேஷன், டூயல் சானல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல் மட்டுமின்றி4.3 இன்ச் TFT ஸ்கிரீன் டிஸ்பிளே, புளூடூத் மூலம் ஸ்மார்ட் போனை இணைக்கும் வசதி என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி டிராக்ஷன் கண்ட்ரோல் (Kawasaki Traction Control) இரண்டு நிலைகளில் வருகிறது, இதை ஓட்டும்போதே மாற்றிக்கொள்ளலாம்.
கவாசாகி நிறுவனம், புதிய நின்ஜா 650 பைக்கை, லைம் கிரீன், மெட்டாலிக் மேட் கிரஃபீன்ஸ்டீல் கிரே/ மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக், மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக்/ மெட்டாலிக் கார்பன் கிரே ஆகிய மூன்று நிறங்களில் வெளியிட்டுள்ளது என்றாலும் தற்போது இந்தியாவில் லைம் கிரீன் நிறம் கொண்ட நின்ஜா 650 பைக்கை மட்டுமே கவாஸாகி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது சர்வதேச சந்தையில் இந்த மூன்று வண்ணங்களில் கிடைத்தாலும், இந்தியாவில் இந்த பைக் லைம் கிரீன் வண்ணத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், நிஞ்சா 650 அதன் ஸ்போர்ட்டி டிசைன், வசதியான ஓட்டுதல், மற்றும் புதிய டெக்னாலஜி அம்சங்களுடன் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் ஸ்போர்ட்ஸ் பைக்-ஆக தொடர்கிறது.
இந்த பைக் ரூ.7.91 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டு அறிமுகமான இதன் வேரியண்டை விட சுமார் ரூ.14 ஆயிரம் அதிகம்.
Sports Bike வாங்கினால் மட்டும் போதாது! அதை ஓட்டும் பொழுது நம் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க சிறந்த தலைக்கவசமும் (Helmet) வாங்க வேண்டும்! உடனே வாங்க...