இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமங்களில் ஒன்றான பஜாஜ் நிறுனவம்(Bajaj Auto Limited), பஜாஜ் ஆட்டோ (இருசக்கர வாகனங்கள்), பஜாஜ் ஃபின்சர்வ் (நிதி சேவைகள்), பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் செயல்படும் பல நிறுவனங்களைக் கொண்டுள்ளது. ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் தொடங்கப்பட்டு, ராகுல் பஜாஜ் தலைமையில் வெற்றி பெற்று, 'ஹமாரா பஜாஜ்' என்ற விளம்பரத்தால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நீங்க showroom பொய் தான் Bike வாங்கணும்னு அவசியம் இல்ல..! வீட்டில இருந்தே வாங்கலாம்..!
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான பல்சர், பிளாட்டினா, அவெஞ்சர் போன்ற இருசக்கர வாகனங்களும் மற்றும் ஆட்டோவும் மிகவும் பிரபலமானது.
இந்தியாவில் அந்த காலம் முதல் இன்று வரை இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஸ்போர்ட்டி கம்யூட்டர் பைக் மாடல் என்றால் அது பஜாஜ் பல்சர் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் வெளியிடப்பட்ட கிளாஸிக் பல்ஸர் 150 அதன் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக மக்களிடையே மிகவும் பிரபலமானது.
இந்நிலையில் பஜாஜ் நிறுவனம், இளைஞர்களை கவரும் வகையில் புதிய மேம்பட்ட வசதிகளுடன் பல்சர் 150 மோட்டார் சைக்கிளை(Bajaj Pulsar 150) அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி புதிய நிறங்களான கிரீன் வித் ஆரஞ்சு, பிளாக் வித் ப்ளூ, பிளாக் வித் கிரே மற்றும் பிளாக் வித் ரெட் என நான்கு அசத்தலான மற்றும் தனித்துவமான நிறங்கள் பார்த்தவுடன் கண்களைக் கவரும் வகையில் உள்ளது.
அந்த வகையில், DTS-i தொழில்நுட்பத்துடன் கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் கூர்மையான டைனமிக்ஸ் உடன் 'நேக்கட் ஸ்போர்ட்ஸ்' (naked sports) பைக்காக புதிய பல்சர் 150 மிளிர்கிறது.
பல்சர் 150 பைக்கின் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் 149.5 சி.சி. சிங்கிள் சிலிண்டர், பஜாஜ் பல்சர் 150 ஏர் கூல்டு என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13.8 பி.எச்.பி. பவரையும், 13.4 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினானது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 15 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் உள்ளது. லிட்டருக்கு 50-55 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய மாடல்களில் அட்ஜஸ்டபிள் நைட்ராக்ஸ் ரியர் சஸ்பென்ஷன், LED ஹெட்லேம்ப், LED இண்டிகேட்டர்கள் போன்ற சிறப்பம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் காஸ் நிரப்பிய ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. சிங்கிள் டிஸ்க் பிரேக், இரு புறமும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களும் உள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. சிக்னல் லைட்டுகள், கிராபிக்ஸ் என தோற்றப்பொலிவு சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்கள் மூலம் பல்சர் 150 பைக் இன்றைய டிஜிட்டல் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகி உள்ள புதிய பஜாஜ் பல்சர் 150, SD, SD UG மற்றும் TD UG என மூன்று வேரியன்ட்களாக விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது SD, SD UG வேரியன்ட்களும் ரூ.1.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், TD வேரியன்ட் ரூ.1.12 லட்சம் மற்றும் UG வேரியன்ட் ரூ.1.15 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
நீங்க showroom பொய் தான் Bike வாங்கணும்னு அவசியம் இல்ல..! வீட்டில இருந்தே வாங்கலாம்..!