
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி, மோட்டார் சைக்கிள்கள், படகுகள், இயந்திரங்கள், மற்றும் ஏரோஸ்பேஸ் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. கவாஸாகியின் மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலமானவை. இந்த நிறுவனம், மோட்டார் சைக்கிள் துறையில், அதன் தயாரிப்புகளின் துணிச்சலான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. குறிப்பாக நிஞ்ஜா தொடர், Z தொடர் மற்றும் வெர்சிஸ் தொடர் போன்ற மாடல்கள் அறியப்பட்டவை.
அதுமட்டுமின்றி கவாஸாகி ஏரோஸ்பேஸ் பிரிவானது பல்வேறு விமானம் மற்றும் ராக்கெட் திட்டங்களில் பங்குதாரராக உள்ளது, H-IIA/H-IIB ராக்கெட் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் இயந்திரங்கள் துறையில், தொழில்துறை இயந்திரங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் போன்ற பல தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துவரும் கவாஸாகி நிறுவனம் அதன் தயாரிப்புகளின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் கவாஸாகி நிறுவனம், புதிதாக மேம்படுத்தப்பட்ட எலிமினேட்டர் 500 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு நவீன க்ரூஸர் பாணி மோட்டார் சைக்கிளாகும்.
இந்த க்ரூஸர் பைக்கில் 451 சி.சி., பேரலல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 45 எச்.பி. பவர் மற்றும் 42.6 என்.எம். டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் தரமாக வழங்கப்படுகிறது.
எல்.இ.டி. விளக்குகள், ஸ்லீக்கான இன்டிகேட்டர்கள், அகலமான ஹேண்டில்பார், 2 இன் 1 எக்சாஸ்ட், ஸ்பிளிட் சீட் செட்டப், 735 மி.மீ. சீட் உயரம் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த பைக்கில், 18 அங்குலம் மற்றும் 16 அங்குல சக்கரங்கள், அதில் டிஸ்க் பிரேக்குகள், முழுமையான டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணையும் வசதி, நேவிகேஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு மோடுகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
கவாசாகி எலிமினேட்டர் 500 க்கு மொத்தம் மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கின்றன. அதாவது மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் மற்றும் பேர்ல் ரோபோடிக் ஒயிட் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. கவாசாகி எலிமினேட்டர் 500 ஐரோப்பிய சந்தைக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கவாசாகி எலிமினேட்டர் 500, அதன் வசதியான இருக்கை மற்றும் அணுகக்கூடிய இருக்கை உயரத்துடன், புதிய பைக்கரைத் தொடங்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இந்த கவர்ச்சிகரமான 'கவாசாகி எலிமினேட்டர் 500' என்ன விலை இருக்கும்னு நினைக்கறீங்க? இதன் ஆரம்ப ஷோரூம் விலை வெறும் ரூ.5.76 லட்சம்!