சென்னையில் 5,000 கோடிக்கு மேல் முதலீடு செய்த 293 நிறுவனங்கள்!


Companies Invest in Chennai...
Companies Invest in Chennai...

சென்னையில் 5,567 கோடி ரூபாய் முதலீடு செய்த சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

நாட்டின் முதல் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு. மேலும் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கவும், அதிக முதலீடுகளை பெறவும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி மானியம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் தொழில் துறையின் மூலமாக முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சென்னையில் முதலீடு பெற நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் கூடுதலாக 293 நிறுவனங்களிடமிருந்து 5,567 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழ்நாடு அரசு 2030-ம் ஆண்டு 83 லட்சம் கோடி பொருளாதார கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. வரும் 2024 ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு 2 ஆண்டுகளில் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 2.97 லட்சம் கோடி முதலீடு பெற்று இருக்கிறது. இதன் விளைவாக முதலீடுகளை பெறுவதில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பண வரவு தரும் வெற்றிலை தீபம்!

Companies Invest in Chennai...

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலமாக 293 தொழில் நிறுவனங்களிடமிருந்து 5, 567 கோடி ரூபாய் முதலீடு பெற்று இருக்கிறது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 4,368 கோடி ரூபாய் என்ற இலக்கைக் காட்டிலும் கூடுதலான முதலீடுகளை பெறப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோருக்கு 1.10 கோடி ரூபாய் மானியமும் வழங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com