நீங்கள் தூங்கும்போதும் உங்கள் வங்கி கணக்கில் பணம் கொட்டும் 6 சூப்பரான பிசினஸ் ஐடியாக்கள்!

passive-income-business-ideas
passive-income-business-ideas
Updated on

எல்லோருக்குமே கடினமாக உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். குறிப்பாக நாம் இரவில் நிம்மதியாக தூங்கும் நேரத்தில் கூட நமது வங்கி கணக்கிற்கு பணம் வந்து கொண்டே இருந்தால் அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 2026 ஆம் ஆண்டை பொறுத்தவரை தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. 

தினமும் காலையில் எழுந்து ஆபீஸ் சென்று வேலை செய்து சம்பாதிப்பது ஒரு வகை என்றால், நமக்காக ஒரு சிஸ்டம் வேலை செய்து பணத்தை உருவாக்கி கொடுப்பது வேற லெவல் ஸ்மார்ட் ஒர்க் ஆகும். இதைத்தான் Passive Income என்று சொல்வார்கள். அப்படி நீங்கள் எந்த ஒரு பெரிய உடல் உழைப்பும் போடாமல், நீங்கள் தூங்கும்போதும் பணத்தை அள்ளித் தரும் 6 அட்டகாசமான பிசினஸ் ஐடியாக்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

டிஜிட்டல் பொருட்கள் விற்பனை!

ஒரு முறை கஷ்டப்பட்டு ஒரு ஈபுக், ஆன்லைன் கோர்ஸ் அல்லது ஏதேனும் பிரத்தியேக டிசைன் டெம்ப்ளேட்களை உருவாக்கி விட்டால் போதும். அதை இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் பல வருஷங்களுக்கு விற்பனை செய்து கொண்டே இருக்கலாம். இது கையில் தொட்டு பார்க்க முடியாத டிஜிட்டல் பொருள் என்பதால் இதற்கு டெலிவரி சார்ஜ் அல்லது குடோன் செலவு கிடையாது. லாபம் முழுவதும் உங்களுக்குத் தான்.

அஃபிலியேட் மார்க்கெட்டிங்!

அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் பொருட்களை நீங்கள் உங்களது சோசியல் மீடியா பக்கம் அல்லது வெப்சைட்டில் பிரமோட் செய்து அதன் மூலம் கமிஷன் பெறுவது ஒரு சூப்பரான ஐடியா. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது கூட யாராவது உங்கள் லிங்கை கிளிக் செய்து பொருட்களை வாங்கினால் அடுத்த நிமிடமே உங்களுக்கான கமிஷன் தொகை வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
'சின்னஞ்சிறு' கதை - கைக்கெட்டிய தூரத்தில்
passive-income-business-ideas

பிரிண்ட் ஆன் டிமாண்ட் பிசினஸ்!

உங்களுக்கு டிசைனிங் செய்ய பிடிக்கும் என்றால் இது செம சாய்ஸ். நீங்கள் டிஷர்ட் அல்லது காபி மக் போன்றவற்றிற்கு டிசைன் மட்டும் செய்து கொடுத்தால் போதும். வாடிக்கையாளர் ஆர்டர் செய்ததும் கம்பெனிகளே அதை பிரிண்ட் செய்து அவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இதில் பொருளை தயாரிக்கும் எந்த ஒரு ரிஸ்க்கும் உங்களுக்கு இல்லை.

பிளாக் மற்றும் யூடியூப் ஆட்டோமேஷன்!

உங்களுடைய சொந்த வெப்சைட்டில் மக்கள் தேடும் தகவல்களை கட்டுரைகளாக எழுதி போட்டாலோ அல்லது யூடியூபில் தொடர்ந்து பயனுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்தாலோ அதிலிருந்து வரும் விளம்பர வருமானம் ஒரு நிரந்தரமான வருமானமாக மாறும். நீங்கள் பல மாதங்களுக்கு முன் போட்ட பழைய வீடியோக்களுக்கும் தொடர்ந்து பணம் வந்து கொண்டே இருக்கும்.

ஏஐ டூல்ஸ்!

இப்போது எங்கு திரும்பினாலும் AI பற்றி தான் உலகமே பேசிக்கொண்டு இருக்கிறது. மக்களின் வேலையை சுலபமாக்கும் ஒரு சிறிய ஏஐ டூல் அல்லது சாப்ட்வேர் உருவாக்கி அதை சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் மாதம் மாதம் உங்களுக்கு ஒரு பெரிய தொகை பேங்க் அக்கவுண்டில் விழுந்து கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சொந்த வீட்டிலேயே வாடகை கணக்கு காட்டுவோருக்கு எச்சரிக்கை: 200% அபராதம் விதிக்க வாய்ப்பு!
passive-income-business-ideas

பயன்படுத்தாத பொருட்களை வாடகைக்கு விடுவது!

உங்களிடம் விலையுயர்ந்த கேமரா அல்லது அதிகம் பயன்படுத்தாத கார் பைக் போன்றவை இருந்தால் அதை அப்படியே சும்மா வைக்க வேண்டாம். இப்போது பொருட்களை வாடகைக்கு விடும் பல செயலிகள் வந்துவிட்டன. அதன் மூலம் அந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

வேலைக்கு செல்பவர்கள் கூட தங்களது ஓய்வு நேரத்தில் இது போன்ற தொழில்களை பார்ட் டைமாக ஆரம்பித்து ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை சுலபமாக உருவாக்கலாம். காலத்திற்கு ஏற்ப உங்களை நீங்களே அப்டேட் செய்துகொண்டு இந்த 2026-ஐ உங்களுக்கான ஒரு மாபெரும் வெற்றி ஆண்டாக மாற்றுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com