பெற்றோர்களுக்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் போடப்போறீங்களா?

insurance
insurance
Published on

தற்போது எந்த வயதினராக இருந்தாலும் திடீரென்று ஏற்படும் உடல் பாதிப்புகள் சகஜமாகி வருகிறது. அதே சமயம் நமது வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு இதுபோல் திடீரென்று நேரும் உடல் நல பாதிப்புகளுக்காக  மருத்துவமனையில் அனுமதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது ஏற்படும் செலவுகளை தாக்குப்பிடிக்க ஒவ்வொரு பிள்ளைகளும் தயாராக இருக்க வேண்டும் .

ஒரு சிலர் நாங்கள் மெடிக்கிளைம் எனப்படும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை கையில் வைத்திருக்கிறோம். ஆனால் எங்களை மருத்துவமனை அலைக்கழிக்கிறது என்றும், நாங்கள் கட்டிய பணத்தில் கால்வாசி பணம் கூட வரவில்லை என்றும், தேவைப்படும் பொழுது இந்த மாதிரி காப்பீட்டு தொகைகள் நம் கைக்கு வருவதில்லை இதை எடுத்து என்ன பயன் என்றும் புலம்புவதை நாம் பார்த்து வருகிறோம்.

நமது பெற்றோர்களுக்கு இதுபோல் காப்பீட்டு திட்டத்தை எடுக்கும் முன் நன்றாக யோசித்து தகுந்த திட்டத்தை எடுக்க வேண்டியது முக்கியம்.சில சமயத்தில் நாம் சாதாரணமாக நினைத்து கவனிக்காமல் எடுக்கும் திட்டங்களால் உதவி தேவைப்படும் நேரத்தில் கவலைக்கு உள்ளாக்கலாம். இந்த பதிவில் பெற்றோர்களுக்கான  (senior citizens)  இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றியும் அதன் விபரங்களையும் காண்போம்.


பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எது சிறந்தது என பார்க்குமுன் அவர்களின் வயது, ஏற்கனவே உள்ள மருத்துவ நிலை, அவர்கள் வசிக்கும் இடம் அல்லது ஊர் (Cashless சிகிச்சை பெறுவதற்கு இது முக்கியம்) மற்றும் ஓராண்டு செலவிற்கான பட்ஜெட் போன்றவைகளை லிஸ்ட் அவுட் எடுங்கள். மேலும் உங்களுடன் இணைக்காமல் பெற்றோர்களுக்கு தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது சிறந்தது.


சிலர் வயதையும் உடலில் ஏற்கனவே உள்ள நோயையும் சொன்னால் கவரேஜ் சிக்கல் வரும் என்ற சந்தேகத்தில் அதைத் தவிர்ப்பார்கள்.இது மிகவும் தவறு. முதலில் பெற்றோரின் வயதும், முந்தைய நோய்கள்,  எடுக்கும் மருந்துகள், previous hospitalisations எல்லாவற்றையும் ஒன்றும் மறைக்காமல் disclose செய்யுங்கள். பல திட்டங்களில் ஏற்கனவே இருக்கும் இயல்பான நோய்களுக்கான (Pre-existing conditions), “waiting period” (காத்திருக்கும் ஆண்டு) 1 முதல்4 ஆண்டுகள் வரை இருக்கும். இதை கவனத்தில் கொண்டு அதற்கு முன் கிடைக்கும் உள்ளதா என ஆராயவும்.

இதையும் படியுங்கள்:
முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!
insurance

மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே தேவை எனும் நிலை தாண்டி அவர்களுக்கான “மருத்துவ தேவைகள்” (hospitalisation, டேக்-கேர், chronic diseases, OPD, diagnostics, ambulance) பற்றி முன்பே யோசித்து அதற்கேற்ப பிளானை எடுக்க வேண்டும்.
இன்சூரன்ஸ் எடுக்கும் முன் இறுதி நேரத்தில் முழு பணம் தராமல் தாமதப்படுத்தும் காரணங்களாக அல்லது சிக்கல் தரும் இந்த விஷயங்கள் நினைவிருக்கட்டும்.
     

Waiting period, co-payment(உங்களால் செலுத்த வேண்டிய ஒரு தொகை), அறை வாடகை (room-rent) , தனித்தனி நோய்களுக்கான ஒதுக்கீடு (Disease wise sub-limit) ,புதுப்பித்தல் ( renewability ) ஆகியவற்றை policy document மூலம் நன்கு புரிந்து கொள்ளவும். அத்துடன்  ICU charges, ambulance, daycare, pre/post hospitalisation போன்ற எக்ஸ்ட்ரா விதிகள் policy கவரேஜ்ல் உள்ளதா என  கவனியுங்கள்.


பலர் சொல்கிறார்கள் என policy-ஐ வாங்காமல், பல திட்டங்களுடன் ஒப்பிட்டு உங்கள் நிதிநிலை  வசதி, போன்றவைகளை கருத்தில் கொண்டு (sum insured, couvert, flexibility, reliability போன்றவற்றில்)  தகுந்ததை தேர்வு செய்து முடிவு எடுப்பது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
தினசரி வீட்டு உபயோகப் பொருட்கள் நீண்ட நாள் உழைக்க சில பயனுள்ள டிப்ஸ்!
insurance


பிரீமியம் (பராமரிப்பு செலவு) நீண்ட ஆண்டுகளுக்கும் செலவாகுமா என்பதை கணக்கிடவும். இது பெற்றோருக்கான வயதான காப்பீட்டில் முக்கியம்.  திட்டத்தில் பல ஆண்டுகளாக எவ்வித மருத்துவ தேவைக்கும் பயன்படாத பட்சத்தில் No claim bonus எனப்படும் கூடுதல் கவரேஜ் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள்.


அதேபோல் ஒரே வருடத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கே க்ளைம் ஆகி உடனே அடுத்தவருக்கும் தேவை வரும் எதிர்பாராத தருணத்தில் உதவும் super top up plan பற்றி அறிந்து அதை எடுத்து சிரமத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.


இன்ஷூரன்ஸ் கம்பெனி தேர்வு செய்யும் முன் few complaints,  claim settlement சதவீதம், good incurred  ஆகியவைகளை கூகுள் உதவியுடன் ஆராயுங்கள். உதாரணமாக க்ளைம் செட்டில்மென்ட் 90 சதவீதம் இருந்தால் அது சரியான முறையில் இயங்குகிறது என அறியலாம்.


நிறைய விஷயங்கள் சொல்கிறீர்கள் ஆனால் எங்களுக்கு குழப்பமாக உள்ளது என நினைப்பவர்கள் தயங்காமல் அனுபவம் வாய்ந்த அறிந்த ஏஜெண்டுகளை அணுகலாம். அல்லது ditto எனும் இலவச இன்ஷூரன்ஸ் ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
சேலம் சுபா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com