முதலீட்டில் மாற்றம் செய்ய நினைப்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்!

Invest
Invest
Published on

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பவை முதலீடு தான். பெரு மற்றும் சிறு முதலீட்டாளர்களின் வருமானத்தை பெருக்கும் எண்ணமானது, இன்றைய காலகட்டத்தில் விரிவடைந்து உள்ளது. அதற்கேற்ப இவர்கள் பல திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய நினைத்தால், என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை வழங்குகிறது இந்தப் பதிவு.

முதலீட்டு யுக்தியில் நாம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படைத் தத்துவமே விரைவான முதலீடு தான். ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ற அணுகுமுறையை நாம் கையாண்டால், நிச்சயமாக வருமானத்தைப் பெருக்க முடியும். பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அவ்வப்போது வட்டி விகிதம் மாற்றப்படும். இருப்பினும் நம்பகமான மற்றும் நிலையான வருமானத்திற்கு பிக்சட் டெபாசிட் ஏற்றது என்பதால், உங்கள் முதலீட்டுத் தேர்வில் நிச்சயம் இத்திட்டம் இடம்பெற வேண்டும்.

முதலீட்டாளர்கள் பலரும் நிலையான வருமானம் தரும் முதலீடுகளையே அதிகம் விரும்புவதால், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் குறித்து அதிகம் சிந்திப்பதுண்டு. நிலையான வருமானத்தைப் பெற அதற்கேற்ற யுக்திகளை கையாள வேண்டியது அவசியமாகும். பிக்சட் டெபாசிட் மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் இனிவரும் காலங்களில் குறைக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். இருப்பினும் ஒரே அடியாக வட்டி குறைப்பு இருக்காது எனவும், மெல்ல மெல்ல 100 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது எனவும் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தனி மனித நிதி அறிவுரை - தங்க முட்டையிடும் வாத்தை வெட்டாதீர்கள்!
Invest

இதனால் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் நினைத்திருந்தால், அதனைத் தாமதப்படுத்தாமல் தற்போதைய வட்டி விகிதத்தில் உடனே முதலீடு செய்வது சிறந்தது. முதலீட்டுக்கான கால அளவை உங்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யலாம். இது தவிர்த்து வர்த்தக வைப்பு நிதி முதலீடுகளையும் கருத்தில் கொள்ளலாம். இதில் அதிக ரேட்டிங் உள்ள முதலீட்டுத் திட்டங்களை நாடுவது சிறந்தது. இருப்பினும் இத்திட்டங்களில் இருக்கும் இடர் அம்சங்களை ஒதுக்கிடாமல், மனதில் கொள்ள வேண்டும்.

சிறுசேமிப்புத் திட்டங்கள்: மூத்த குடிமக்களுக்கு அதிக பலன்களை வழங்கும் திட்டமாக இது கருதப்படுகிறது. 5 ஆண்டு கால சிறு சேமிப்புத் திட்டத்தில் ரூ.30 இலட்சம் வரை முதலீடு செய்ய இத்திட்டம் அனுமதிக்கிறது. வரிச்சலுகை மற்றும் அதிக வட்டி விகிதம் போன்றவற்றால், முதலீட்டாளர்கள் பலரும் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். முதலீட்டில் மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதாக இருக்கும். மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் போன்ற திட்டங்கள் 7%-க்கும் மேலான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்டில் இந்த மாதிரி முதலீடு செய்தால் பணமழை தான்!
Invest

நிலையான வருமானத்தை வழங்கும் திட்டங்களில் கவனம் செலுத்தும் போது மூன்று அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பணத்திற்கான பாதுகாப்பு, பணமாக்கல் தன்மை மற்றும் அதிக வருமானம் ஆகிய 3 அம்சங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும், அதற்கேற்ப முதலீட்டில் விரிவாக்கம் செய்வதும் அவசியமாகும். வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதால், பத்திரங்களில் முதலீடு செய்யும் போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com