நஷ்டமே வராத முதலீட்டு ரகசியம்: அசட் அலகேஷன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் உங்கள் பணத்தை பாதுகாப்பாக உயர்த்துவது எப்படி என்று விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
அசட் அலகேஷன் - Investment Strategy
அசட் அலகேஷன் - Investment Strategy
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

அசட் அலகேஷன் (Asset Allocation) என்பது ஒரு முதலீட்டாளர் தனது பணத்தை பங்குகள் (Equities), கடன் பத்திரங்கள் (Fixed Income/Bonds), தங்கம் (Gold) மற்றும் ரொக்கம் (Cash) போன்ற பல்வேறு வகையான சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யும் ஒரு முதலீட்டு உத்தியாகும். இதன் முக்கிய நோக்கம் முதலீட்டின் ஆபத்தைக் குறைத்து அதிகபட்ச லாபத்தை சமநிலையான முறையில் பெறுவதாகும்.

அசட் அலகேஷன் ஏன் முக்கியம் தெரியுமா?

*ஆபத்து மேலாண்மை:

ஒரே சொத்தில் உதாரணத்திற்கு பங்குகளில் மட்டுமே அனைத்துப் பணத்தையும் முதலீடு செய்யும்போது, சந்தை வீழ்ச்சி அடைந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும். சொத்துக்களைப் பிரித்து முதலீடு செய்யும் பொழுது ஒரு சொத்தின் நஷ்டத்தை மற்றொன்றின் லாபம் ஈடு கட்டிவிடும்.

*சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளல்:

வெவ்வேறு சொத்து பிரிவுகள் சந்தை மாற்றங்களுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினை ஆற்றும். பங்குகள் வீழ்ச்சி அடையும் பொழுது பொதுவாக தங்கம் அல்லது கடன் பத்திரங்களின் மதிப்பு உயரும்.

*இலக்குகளை அடைதல்:

முதலீட்டாளரின் வயது, கால அவகாசம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டை வடிவமைக்க இது உதவுகிறது.

முக்கிய சொத்து பிரிவுகள் (Major Asset Classes):

அசட் அலகேஷனின் முக்கிய கூறுகள் பங்குகள், கடன் சார்ந்த முதலீடுகள், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவை.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் தினமும் லாபம் ஈர்க்கும் 4 ட்ரேடிங் ரகசியங்கள்!
அசட் அலகேஷன் - Investment Strategy

*ஈக்விட்டி (பங்குகள் / மியூச்சுவல் ஃபண்டுகள்):

அதிக ரிஸ்க் கொண்டது. ஆனால் நீண்ட காலத்தில் அதிக லாபம் தரக்கூடியது. நீண்டகால முதலீட்டிற்கு ஏற்றது.

*ஃபிக்சட் இன்கம் (Fixed Income/கடன் பத்திரங்கள்/FD):

வங்கி எஃப்டி (FD), அரசு பத்திரங்கள் போன்றவை குறைந்த ரிஸ்க் கொண்டது. நிலையான வருமானம் மற்றும் மூலதன பாதுகாப்பிற்கு உதவும்.

*தங்கம்:

பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக விளங்குபவை. பொருளாதார நெருக்கடி காலங்களில் கை கொடுக்கும்.

*ரியல் எஸ்டேட்:

நீண்டகால முதலீடு. வாடகை வருமானம் மற்றும் சொத்து மதிப்பு உயர்வு ஆகிய நன்மைகளைத்தரும்.

நமக்கு எந்த அளவு பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் தேவை என்பதை நம் வயது, இலக்கு மற்றும் கால அவகாசம், ஆபத்தைத் தாங்கும் திறன் போன்ற மூன்று விஷயங்கள் அசட் அலகேஷனை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.

அசட் அலகேஷன் - Investment Strategy
அசட் அலகேஷன் - Investment Strategy

அசட் அலகேஷன் உத்திகள் (Strategies):

*Strategic allocation:

ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து, சந்தை மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் நீண்ட காலத்திற்கு அதே விகிதத்தைத் தொடர்வது.

*Tactical:

சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தற்காலிகமாக ஒரு சொத்தின் முதலீட்டை அதிகரித்து, மற்றொன்றைக் குறைப்பது. உதாரணத்திற்கு பங்குகள் மலிவாக இருக்கும் பொழுது ஈக்விட்டியை அதிகரிப்பது.

*Dynamic:

சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப முதலீட்டு விகிதங்களை தானாகவே மாற்றி அமைப்பது.

*போர்ட்ஃபோலியோ மறு சீரமைப்பு (Rebalancing):

காலப்போக்கில் பங்குகளின் மதிப்பு உயரும் பொழுது நம் அலகேஷன் விகிதம் மாறக்கூடும். எனவே வருடத்திற்கு ஒருமுறை முதலீட்டை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பழைய அலகேஷன் விகிதத்திற்கு கொண்டு வரவேண்டும்.

அசட் அலகேஷனின் நன்மைகள்:

சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஒரு முதலீட்டு துறை, உதாரணத்திற்கு பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் பொழுது, தங்கம் அல்லது எஃப்டி போன்ற மற்றொன்று நம் நஷ்டத்தை சமன் செய்யும்.

பணம் முழுவதும் ஒரே இடத்தில் இல்லாததால், சந்தை வீழ்ச்சியின்போது முதலீட்டாளர்களுக்கு பதற்றம் ஏற்படாது.

குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு ஏற்ப பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய உதவுகிறது. இதனை நாமாகவே பிரித்து முதலீடு செய்யலாம் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள மல்டி அசட் அலகேஷன் ஃபண்டுகள் மூலமாகவும் எளிதாக முதலீடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வெறும் 10,000 ரூபாயில் கார்ப்பரேட் பாண்ட்ஸ் முதலீடு செய்வது எப்படி?
அசட் அலகேஷன் - Investment Strategy
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com