பங்குச்சந்தையில் தினமும் லாபம் ஈர்க்கும் 4 ட்ரேடிங் ரகசியங்கள்!

ஸ்கால்ப்பிங் முதல் பொசிஷன் வரை உங்களுக்கான சரியான ட்ரேடிங் முறையைக் கண்டறியுங்கள்.
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on

ங்குச்சந்தையில் வர்த்தகம் (Trading) செய்வது என்பது வெறுமனே பங்குகளை வாங்கி விற்பது மட்டுமல்ல; அது ப்ரத்யேக உத்திகள் மற்றும் கால, நேர மேலாண்மை சார்ந்த கலை.

சந்தையின் அசைவுகளையும் விலை மாற்றங்களையும் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதில் நான்கு முக்கிய டிரேடிங் வகைகள் உள்ளன. அவை: ஸ்கால்ப்பிங், இன்ட்ராடே, ஸ்விங் மற்றும் பொசிஷன் டிரேடிங்.

இந்த நான்கு டிரேடிங் வகைகளின் விபரங்கள் இதோ:

1. ஸ்கால்ப்பிங் டிரேடிங் (Scalping Trading)

கால அளவு: சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை.

செயல்படும் முறை: சந்தையின் மிகச்சிறிய விலை மாற்றங்களை (Price Fluctuations) உடனுக்குடன் பிடித்து லாபம் பார்ப்பது இதன் முறை. இதில் ஒருவர் ஒரு நாளில் பல பத்து அல்லது நூற்றுக்கு மேலான வர்த்தகங்களைச் செய்வார்.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?: இதில் பங்கேற்பவர்கள் முழுநேர வர்த்தகர்கள் மட்டுமே. இந்த ட்ரேடிங் வகைகள், ஆர்டர் புக் மற்றும் டிக் சார்ட்டுகளை (Tick Charts) நொடிக்கு நொடி கவனித்து, மின்னல் வேக முடிவெடுக்கும் திறன் தேவை.

முதலீட்டு அளவு: குறைந்தபட்சம் ₹25,000 முதல் தொடங்கலாம். ஆனால் சிறிய விலை மாற்றத்தில் கணிசமான லாபம் பெற பெரிய தொகையை வர்த்தகத்தில் இறக்குவர்.

எதிர்பார்க்கும் லாபம்: ஒரு வர்த்தகத்திற்கு 0.5% முதல் 1% வரை மட்டுமே. ஆனால் நாள் முடிவில் இவை அனைத்தும் சேர்ந்து நல்ல தொகையாக மாறும்.

தன்மை & எந்த வகையான பங்குகள்?: அதிக லிக்விடிட்டி மற்றும் அதிக வால்யூம் கொண்ட பெரிய நிறுவனப் பங்குகள், ஆப்ஷன்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை வீழ்ச்சி இனி கவலையில்லை! சாமானியர்களுக்கான செபியின் 'லைஃப் சைக்கிள் ஃபண்ட்'!
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,

2. இன்ட்ராடே டிரேடிங் (Intraday Trading)

கால அளவு: ஒரே நாள் (காலை 9:15 முதல் மாலை 3:30 மணி வரை).

செயல்படும் முறை: அன்றைய தினத்திற்குள் பங்குகளை வாங்கி, சந்தை முடிவதற்குள் விற்றுவிட வேண்டும் (அல்லது ஷார்ட் செல்லிங் செய்ய வேண்டும்).

யாரெல்லாம் பங்கேற்பலாம்?: தீவிர வர்த்தகர்கள் (Traders).

முதலீட்டு அளவு: செபியின் (SEBI) புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தரகர்கள் அளிக்கும் குறிப்பிட்ட லீவரேஜ் வசதியைப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் ₹10,000 வைத்துக்கூடத் தொடங்கலாம்.

எதிர்பார்க்கும் லாபம்: நாளொன்றுக்கு 1% முதல் 3% வரை பெற வாய்ப்புள்ளது.

தன்மை & எந்த வகையான பங்குகள்?: அன்றைய தினத்தில் செய்திகள், காலாண்டு முடிவுகள் அல்லது பொருளாதார அறிவிப்புகள் வெளியாகக்கூடிய பங்குகள். தொழில்நுட்ப வரைபடங்கள் (Technical Charts) மற்றும் சந்தையின் அன்றைய வேகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது.

ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,

3. ஸ்விங் டிரேடிங் (Swing Trading)

கால அளவு: சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை.

செயல்படும் முறை: சந்தையின் 'ஸ்விங்' எனப்படும் ஏற்ற இறக்க அலைகள், மொமென்ட்டம் எனப்படும் அதிவேக ஏற்றம், ப்ரேக் ஔட் ஆகியவற்றில் ஒன்றையோ ஒன்றுக்கு மேலானவற்றையோ பயன்படுத்தி, ஒரு பங்கின் குறுகிய கால அதிலாபத்தை கணித்து வர்த்தகம் செய்வது. (மொமென்ட்டம் ட்ரேடிங், ப்ரேக் ஔட் ட்ரேடிங் ஆகியவற்றைத் தனி வகைகளாகச் சொல்வதும் உண்டு).

யாரெல்லாம் பங்கேற்பலாம்?: பகுதிநேர அல்லது முழு நேர வர்த்தகர்கள், பகுதிநேர அல்லது முழு நேர முதலீட்டாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் ஏற்றது.

முதலீட்டு அளவு: லீவரேஜ் இல்லாமல் சொந்தப் பணத்தில் வர்த்தகம் செய்வது பாதுகாப்பானது. குறைந்தபட்சம் சில ஆயிரங்களில் தொடங்கி, படிப்படியாக அதிகரிப்பது நல்லது.

எதிர்பார்க்கும் லாபம்: ஸ்விங் ட்ரேடிங்கில் பொதுவாக ஒரு வர்த்தகத்திற்கு 5% முதல் 8% வரை லாபம் கிடைப்பதே நல்ல லாபம்தான். சில சமயம் 15% - 30% கூட கிடைக்கும்.

பங்கின் தன்மை: உயர் அசைவுத்தன்மை (High Beta) கொண்ட, குறுகிய காலத்தில் 5% முதல் 10% வரை அதிவேக நகர்வைக் கொடுக்கும் பங்குகள்.

4. பொசிஷன் டிரேடிங் (Position Trading)

கால அளவு: சில மாதங்கள் முதல் 1 அல்லது 2 ஆண்டுகள் வரை.

செயல்படும் முறை: ஒரு பங்கின் அடிப்படை பலம் (Fundamentals) மற்றும் நீண்டகால டிரெண்ட் (Trend) அடிப்படையில், பெரிய லாபத்திற்காகக் காத்திருப்பது.

யாரெல்லாம் பங்கேற்பலாம்?: வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் (இரு தரப்பும்). சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தையில் 'காப்பி கேட்' முதலீடா? கிணற்றில் குதிப்பதற்குச் சமம்!
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,

முதலீட்டு அளவு: குறைந்தபட்சம் ₹10,000 முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.

எதிர்பார்க்கும் லாபம்: ஆண்டிற்கு 20% முதல் 50% வரை அல்லது அதற்கு மேல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பங்கின் தன்மை: 70% அடிப்படைப் பகுப்பாய்வு (குறைந்த கடன், தொடர் லாப வளர்ச்சி) மற்றும் 30% தொழில்நுட்பப் பகுப்பாய்வு அடிப்படையில் தேர்வாகும் வலுவான லார்ஜ்-கேப் நிறுவனங்கள்.

ஏன் பொசிஷன் டிரேடிங்கிற்கு மேல் வேறு டிரேடிங் வகை இல்லை?

டிரேடிங் என்பதன் அடிப்படைத் தத்துவமே "சந்தையின் ஒரு குறிப்பிட்ட விலை நகர்வையோ அல்லது டிரெண்டையோ (Trend) பிடித்து லாபம் ஈட்டுவது" என்பதுதான்.

தொழில்நுட்ப ரீதியாக சந்தையின் ஒரு குறிப்பிட்ட டிரெண்ட் அதிகபட்சமாக 1 முதல் 2 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதற்கு மேல் சந்தையின் சுழற்சி (Market Cycle) மாறத் தொடங்கும். 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பங்கை விற்காமல் வைத்திருக்கும்போது அது டிரேடிங் என்ற வரம்பைத்தாண்டி "நீண்டகால முதலீடு" (Long-Term Investing) என்ற எல்லைக்குள் சென்றுவிடுகிறது. எனவேதான் டிரேடிங் முறைகளின் உச்சகட்ட எல்லையாக 'பொசிஷன் டிரேடிங்' கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் 10,000 ரூபாயில் கார்ப்பரேட் பாண்ட்ஸ் முதலீடு செய்வது எப்படி?
ட்ரேடிங் வகைகள் - Stock Market Tamil,
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com